Home
Computer

இந்திய கணினி சந்தையில் எச்சிஎல்லின் புதிய அல்ட்ராபுக்

By Karthikeyan
இந்திய கணினி சந்தையில் எச்சிஎல்லின் புதிய அல்ட்ராபுக்

கணினி சாதனங்களைத் தயாரித்து வரும் பெரிய நிறுவனங்கள் தற்போது இந்திய சந்தையை மொய்க்க ஆரம்பித்துவிட்டன. இந்திய சந்தையில் தம்முடைய புதிய சாதனங்களை ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக அவை போட்டி போட்டுக் கொண்டு அறிமுகப்படுத்தி வருகின்றன.

அந்த வகையில் எச்சிஎல் நிறுவனமும் தனது புதிய அல்ட்ராபுக்கை இந்திய சந்தையில் வெகு விரைவில் களமிறக்க இருக்கிறது. அல்ட்ரா ஸ்மார்ட் எம்இ என்று அழைக்கப்படும் இந்த அல்ட்ராபுக் ரூ.51,990க்கு விற்கப்பட இருக்கிறது.

விலை சற்று அதிகமாக இருந்தாலும் இந்த அல்ட்ராபுக் எக்கச்சக்க தொழில் நுட்ப வசதிகளுடன் வருகிறது. குறிப்பாக இன்டல் 3ஜி ஐவி ப்ரீட்ஜ் ப்ராசஸர், டபுள்யுஎக்ஸ்ஜிஎ ரிசலூசன் கொண்ட 14 இன்ச் டிஸ்ப்ளே, 32ஜிபி எஸ்எஸ்டி மற்றும் 500ஜிபி எச்டிடி சேமிப்பு மற்றும் 4ஜிபி ரேம் போன்ற வசதிகளுடன் இந்த லேப்டாப் வருகிறது.

இணைப்பு வசதிகளுக்காக இந்த லேப்டாப் யுஎஸ்பி போர்ட்டுகள், 4 இன் 1 மெமரி கார்டு ரீடர், 1.3எம்பி வெப் கேமரா மற்றும் எச்டிஎம்ஐ போர்ட் போன்ற வசதிகளை தாங்கி வருகிறது. மேலும் இந்த லேப்டாப் ட்ராக்பேட் மற்றும் மல்டி டச் செய்கைகளையும் சப்போர்ட் செய்யும்.

மேலும் உயர்தர அல்ட்ரா ஸ்மார்ட் எம்இ லேப்டாப்பும் வர இருக்கிறது. இந்த லேப்டாப் 8ஜிபி ரேம், இன்டல் ஐ5 மற்றும் ஐ7 ப்ராசஸர்கள் மற்றும் 750ஜிபி ஹார்ட் ட்ரைவ் போன்ற வசதிகளையும் கொண்டிருக்கின்றது. 128ஜிபி எஸ்எஸ்டி கொண்டு வரும் இந்த லேப்டாப் ரூ.54,990க்கு விற்கப்பட இருக்கிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X