Home
Computer

எச்சிஎல் வழங்கும் ரா.ஒன் வரிசை லேப்டாப்புகள்

By Super
எச்சிஎல் வழங்கும் ரா.ஒன் வரிசை லேப்டாப்புகள்
ஷாரூக்கான் நடிப்பில் வெளிவர இருக்கும் சூப்பர் ஹீரோ சினிமாவான ரா.ஒன் படம் இந்திய ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படத்தை வைத்து ஸ்பெஷல் எடிசன் ரா.ஒன் வரிசை புதிய லேப்டாப்புகளை எச்சிஎல் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்பெஷல் எடிசன் லேப்டாப்புகள் தீபாவளிக்குள் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளன.

எச்சிஎல் இன்போ சிஸ்டமும் மற்றும் ஆர்எ.ஒன் தயாரிப்பு நிறுவனமும் இணைந்து தீபாவளி பரிசமாக இந்த லேப்டாப்புகளை விற்பனைக்கு கொண்டு வர உள்ளனர்.

இந்த எச்சிஎல் ஆர்எ.ஒன் வரிசை லேப்டாப்புகள் சிறந்த ஆர்எ.ஒன் ஸ்கின்னுடன் எச்டி அனுபவத்தை வழங்குகிறது. மேலும் ரிட்டர்ன் டூ பென்ச் வசதி கொண்ட 2 வருட உத்திரவாதத்துடனும் 3 வருட மெக்காபீ ஆண்டி வைரஸ் உரிமத்துடனும் வருகிறது.

இந்த ஆர்எ.ஒன் லேப்டாப்புகளின் வரிசையைப் பார்த்தால் இது எக்ஸைட் 2025, எக்ஸைட் 2035 மற்றும் எச்சிஎஸ் எம்இ ஐகன் 1034 போன்ற பெயர்களில் வருகிறது. இந்த லேப்டாப்புகளில் சிறந்த பொழுதுபோக்கு அம்சங்களும் அதுபோல் திரையரங்கு அனுபவமும் கண்டிப்பாக நமக்குக் கிடைக்கும்.

எச்சிஎல் நிறுவனத்தை சேர்ந்த பிரின்ஸி பட்நாகர் கூறும் போது இந்த லேப்டாப்புகள் உயர்ந்த டெபனிசன் கொண்ட படங்களுக்கு உத்திரவாதம் தரும் என்று கூறினார்.

3 வருட மெகஅஃபீ ஆண்டிவைரஸ் உத்திரவாதமும் அதுபோல் 2 வருட ரிட்டர்ன் டூ பென்ச் என்ற உத்திரவாதமும் இந்த லேப்டாப்புகளுடன் வருகின்றன. இந்த லேப்டாப்புகள் இந்த தீபாவளிக்கு சந்தைக்கு வர இருக்கிறது. இனி எச்டி திரைப்படங்களை பார்க்கத் திரையரங்குகளுக்குச் செல்லத் தேவையில்லை. வீட்டில் இருந்த படியே இந்த லேப்டாப்புகளில் பார்க்க முடியும்.

இந்த எச்சிஎல்லின் ஆர்எ.ஒன் லேப்டாப்புகள் எச்டி ஸ்ப்ளேயுடன் க்ராபிக் கார்டும் கொண்டுள்ளன. இதன் ஸ்டீரியோ ஸ்பீக்கர் அமைப்பும் தரமான ஒலி அமைப்பைக் கொடுக்கும். இதன் பேனல் மெலிதாக இருக்கிறது. அதுபோல் இது எல்இடி பேக்லிட் திரையைக் கொண்டிருக்கிறது.

இது அலுமினியம் கேசிங் கொண்டு குறைந்த எடையில் உள்ளது. அதனால் இதை எடுத்துச் செல்வது மிகவும் எளிது. அதனால் எல்லா இடங்களிலும் இந்த லேப்டாப்புகள் மூலம் நாம் எச்டி படங்களைப் பார்க்க முடியும்.

மேலும் எச்சிஎல் பிலிப்ஸ் சவண்ட்பார் மற்றும் எக்ஸ்ட்ரா க்ராபிக்ஸ் கார்டு போன்றவற்றையும் வழங்குவதால் இதன் தரத்திற்கு ஈடு இணை இருக்காது என்றே சொல்லாலாம்.

இந்த ஆர்எ.ஒன் லேப்டாப்புகளை எச்சிஎல் ஸ்டோரிலிருந்து ஆன்லைன் மூலமும் மற்றும் எஸ்எம்எஸ் மூலமும் மற்றும் எச்சிஎல் எம்இ ஸ்டோர்களிலும் இதை வாங்கலாம். அக்டோபர் 31 வரை ஆன்லைன் எச்சிஎல் ஸ்டோர் ஆபர் வழங்குகிறது. இவற்றின் விலையைப் பார்த்தால் ரூ.32000 முதல் ரூ.42000 வரை இருக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X