Home
Computer

ரூ.5,999ல் அசத்தலான அம்சங்களுடன் புதிய டேப்லெட்!

By Karthikeyan
ரூ.5,999ல் அசத்தலான அம்சங்களுடன் புதிய டேப்லெட்!

கோடெக் டிஜிட்டல் நிறுவனம் சமீபத்தில் இந்திய சந்தையில் ஒரு புதிய டேப்லெட்டைக் களமிறக்கி இருக்கிறது. இந்த புதிய டேப்லெட்டிற்கு பன்டேப் பிட் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த புதிய டேப்லெட் பல சூப்பரான தொழில் நுட்ப வசதிகளுடன் வருகிறது.

குறிப்பாக ஆன்ட்ராய்டு 4.0 ஐசிஎஸ் இயங்கு தளத்தில் வரும் இந்த டேப்லெட் ஏராளமான அப்ளிகேசன்களுடன் வருகிறது. இதன் 7 இன்ச் கப்பாசிட்டிவ் டிஸ்ப்ளே மிகவும் துல்லியமாக இருக்கிறது. இந்த டேப்லெட் 512எம்பி டிடிஆர்3 ரேமுடன் 1 ஜிஹெர்ட்ஸ் ப்ராசஸருடன் வருவதால் இதன் இயங்கு வேகம் அபாரமாக இருக்கும்.

இந்த டேப்லெட்டின் 4ஜிபி இன்டர்னல் மெமரியை மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 32ஜிபி வரை அதிகரிக்கலாம். இதன் 0.3எம்பி முகப்பு கேமரா சிறந்த வீடியோ உரையாடலை வழங்கும். இந்த டேப்லெட் ஒரு 3 ஆக்சிஸ் அக்சிலரேசன் சென்சாரையும் வழங்குகிறது.

இதில் இருக்கும் எச்டிஎம்ஐ மற்றும் யுஎஸ்பி போர்ட்டுகள் வழியாக மவுஸ் மற்றும் கீபோர்ட் ஆகியவற்றி இந்த டேப்லெட்டோடு இணைத்துக் கொள்ளலாம். இதன் பேட்டரி நீடித்த இயங்கு நேரத்தை வழங்குகிறது.

இந்த டேப்லெட்டின் முக்கிய அம்சம் இதன் ப்ரீலோடட் அப்ளிகேசன்கள் ஆகும். குறிப்பாக இந்த டேப்லெட் கைட் மை ட்ரீட்மென்ட் என்ற அப்ளிகேசனுடன் வருகிறது. இந்த அப்ளிகேசன் மூலம் அருகில் இருக்கும் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்கள் பற்றிய விவரங்களை இந்த டேப்லெட்டில் அறிந்து கொள்ளலாம். அதோடு மருத்துவர்களைச் சந்திக்கும் நேரத்தையும் இந்த டேப்லெட்டில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் இந்த டேப்லெட்டில் மாணவர்களுக்கான அட்டனோ இபுக் ப்ளேயர் மற்றும் அப்ளிகேசன்களைக் கொண்டு வருகிறது. இதன் மூலம் இந்த டேப்லெட்டில் 1500க்கும் மேற்பட்ட இபுக்குகள் மற்றும் கல்வி சம்பந்தமான 7500க்கும் மேற்பட்ட மல்டி மீடிய பைல்களை வாசிக்க முடியும்.

மேலும் இந்த அப்ளிகேசன்கள் ஐஐடி-ஜேஇஇ போன்ற தேர்வுகளுக்கான வினா விடைகளையும் வைத்திருக்கின்றன. மேலும் இதி்ல் இருக்கும் மை ப்ளே அப்ளிகேசனில் மியூசிக் ப்ளே லிஸ்டுகளை உருவாக்கிக் கொள்ளலாம். அதோடு இதில் இருக்கும் ஹூங்கமா பாலிவுட் அப்ளிகேசன் சூப்பரான பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும். அதாவது இந்த அப்ளிகேசன் 6000 பாடல்களையும் 3000 வீடியோ பாடல்களையும் கொண்டிருக்கின்றது.

அதோடு இந்த டேப்லெட் பல சூப்பரான விளையாட்டுகளையும் கொண்டிருக்கிறது. குறிப்பாக ஆங்கிரி பேர்ட், செஸ் மற்றும் டிக் டேக் டோ மற்றும் பல கேம்களையும் இதி்ல விளையாடலாம்.

இந்த புதிய டேப்லெட் இந்திய சந்தையில் ரூ.5,999க்கு விற்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X