சந்தையை கலக்க வரும் புதிய கூகுள் டேப்லெட்!

Posted By: Staff
சந்தையை கலக்க வரும் புதிய கூகுள் டேப்லெட்!
டிஜிட்டல் உலகத்திற்கு கூகுளின் பங்களிப்பு மிக அதிகமாகும். படிப்படியாக அது ஆன்ட்ராய்டில் காலடி எடுத்து வைத்தது. இப்போது அந்த ஆன்ட்ராய்டு தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது.

இதன் தொடர்ச்சியாக கூகுள் நிறுவனம் ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் க்ரீம் சான்ட்விஜ் இயங்கு தளத்தில் இயங்கக்கூடிய ஒரு புதிய டேப்லட்டை களமிறக்கத் திட்டமிட்டிருக்கிறது. அந்த டேப்லெட்டின் படத்தை கூகுள் வெளியிட்டிருக்கிறது.

ஆனால் இந்த டேப்லெட் எப்போது சந்தைக்கு வரும் என்பது அறிவிக்கப்படவில்லை. ஆனால் அந்த டேப்லெட்டின் பெயர் நெக்சஸ் டேப் என்று இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அது நவீன தொழில் நுட்பங்களுடன் வரும் என்றும் தெரிகிறது.

குறிப்பாக, இந்த டேப்லெட்டுக்கான புதிய வெர்சன் ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை உருவாக்குவதில் கூகுள் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இந்த புதிய டேப்லெட் க்வாட்-கோர் என்விஐடிஐஏ டெக்ரா 2 பிராசஸர் கொண்டு வரும் எனத் தெரிகிறது.

எனவே,இதன் செயல் திறன் மிக அபாரமாக இருக்கும். மேலும் இது ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ்க்ரீம் சான்ட்விஜ் இயங்குதளத்தைக் கொண்டு வருவதால் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த டேப்லெட்டின் ஆன்ட்ராய்டு இயங்குதளம் மல்டி டாஸ்க் செய்வதற்கும் பெரும் உதவியாக இருக்கும். தவிர, தகவல் பரிமாற்றம் செய்யவும் மற்றும் உரையாடலுக்கும் தகுந்த டேப்லெட்டாக இது இருக்கும். இதன் யூசர் இன்டர்பேஸ் மூலம் இந்த டேப்லெட்டை மிக எளிதாக இயக்கலாம். மேலும் இந்த டேப்லெட்டில் கூகுள் க்ளவுட் வசதிகளையும் வழங்க இருக்கிறது.

ஏராளமான நிறுவனங்கள்  டேப்லெட்டுகளைத் தயாரிப்பதில் அதிக முனைப்பு காட்டுகின்றன. எனவே, இந்த புதிய டேப்லெட்டைக் கொண்டு வர கூகுள் வேறு  ஒரு நிறுவனத்துடன் கைகோர்க்கும் என்று தெரிகிறது. ஆனால் இது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளிவரவில்லை.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்