ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!

Posted By: Karthikeyan
ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!

கூகுள் தனது ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டை பல மொபைல்களுக்கு தொடங்கிவிட்டது. இதன் மூலம் நெக்சஸ் எஸ், கேலக்ஸி நெக்சஸ் எச்எஸ்பிஎ+ மோட்டோரோலா எக்சூம் வைபை போன்ற மொபைல்கள் இந்த புதிய ஆன்ட்ராய்டு அப்டேட்டைப் பெறும். இந்த அப்டேட் ஒரு சில தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தையில் மட்டுமே கிடைக்கும்.

அதாவது எக்சூம் வைபை அமெரிக்காவில் மட்டுமே இந்த அப்டேட்டைப் பெறும். அதனால் இந்தியாவில் இருக்கும் நெக்சஸ் எஸ் ஸ்மார்ட்போனைப் பயன்படுத்துவோர் ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைப் பெற காத்திருக்க வேண்டும்.

இந்த புதிய ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைப் பற்றி கூகுள் தனது இணையதளமான கூகுள்+ல் "நாங்கள் ஆன்ட்ராய்டு 4.0.4 ஐஸ்க்ரீம் சான்ட்விஜ் அப்டேட்டை யுஎம்டிஎஸ்/ஜிஎஸ்எம் நெக்சஸ் எஸ், எக்சூம் வைபை மற்றும் எச்எஸ்பிஎ+ கேலக்ஸி நெக்சஸ் டிவைஸ்களுக்கு தொடங்கி இருக்கிறோம். ஒரு சிலர் முதல் முறையாக ஐஸ்க்ரீம் சான்ட்விஜ்ஜைப் பெறுவர். ஆனால் ஏற்கனவே ஐஸ்க்ரீம் சான்விஜ் அனுபவத்தைப் பெற்றவர்கள் இந்த அப்டேட் மூலம் சிறந்த கேமரா, லகுவான திரை சுழற்சி மற்றும் போன் எண்களை மேம்பட்ட முறையில் அறிதல் மற்றும் பல வசதிகளைப் பெறுவார்கள்" கூறி இருக்கிறது.

கூகுளின் கூற்று உண்மையாகும் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்