கூகுளில் எச்சிரிக்கை தேவை!!!

Written By:

இணையத்தில் சிறந்து விளங்கும் கூகுள் அது தன் வாடிக்கையாளர்களை கவர பல யுத்திகளை தினமும் கையாண்டு வருகிறது இதன் முலம் அதன் யூஸர்ஸ் எண்ணிக்கை தினம் தினம் அதிகரித்து வருகிறது.

மேலும் கூகுள் தன் வாடிக்கையாளர்களுக்குத் தேவைப்படும் சாப்ட்வேர் அப்ளிகேஷன்களை வழங்க கூகுள் பிளே ஸ்டோர் அமைத்து, அதில் ஒரு மல்லியனுக்கும் மேற்பட்ட அப்ளிகேஷன்களைக் கொண்டு தற்பேது செயல்பட்டு வருகிறது.

இது பெரும்பாலும் ஆண்ட்ராய்டு மொபைலுக்கு பொருந்தும் வண்ணமே இதன் அனைத்து அப்ளிகேஷன்களுமே இருக்கும் நண்பரே, இதற்கு காரணம் ஆண்ட்ராய்டு உலக மொபைல் சந்தையை ஆக்கிரமித்து இருப்பது தான் காரணம்.

இதனால், கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்கள் அதிக அளவில் டவுண்லோட் செய்யப்பட்டுப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், இதில் சில அப்ளிகேஷன்கள் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் உள்ளதாக, ஆன்ட்டி வைரஸ் தொகுப்புகளைத் தயாரித்து வழங்கும் செமாண்டெக் நிறுவனம் அறிவித்துள்ளது.

இது சென்ற ஏழு மாதங்களில் மட்டும் ஏறத்தாழ 1,200 அப்ளிகேஷன்கள் இது போல உள்ளதனை இந்நிறுவனம் உறுதி செய்துள்ளது. எனவே, கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து அப்ளிகேஷன்களை டவுண்லோட் செய்திடும் முன் சற்று கவனத்துடன் அவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என செமாண்டெக் நிறுவனம் அறிவித்துள்ளது இதோ அதன் விரிவான செய்திகளை கீழே காணுங்கள்.....

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
கூகுளில் கவனமாக இருங்கள்!

#1

செமாண்டெக் அடையாளம் கண்ட பல அப்ளிகேஷன்கள், வயது வந்தோருக்கானது. இந்த அப்ளிகேஷன்கள், பயனாளர்களை சில இணைய தளங்களுக்கு அழைத்துச் சென்று, மால்வேர் புரோகிராம்களை இயக்குகின்றன. இவற்றைப் பயன்படுத்துவோரின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுகின்றன என்று அதன் அறிக்கை கூறுகிறது.

கூகுளில் கவனமாக இருங்கள்!

#2

இந்த புரோகிராம்களில் பல கூகுள் பிளே ஸ்டோரில் வெகு நாட்கள் வைத்திருக்கப் படுவதில்லை. புரோகிராம்களை பதிந்து வைத்தவர்களே, அவற்றை எடுத்துவிடுகின்றனர். அவற்றின் இடத்தில் புதிய மால்வேர் கலந்த புரோகிராம்களைப் பதித்துவிடுகின்றனர் ஹாக்கர்கள்.

கூகுளில் கவனமாக இருங்கள்!

#3

இணைய தளப் பாதுகாப்பு சார்ந்து செயல்படும் செமாண்டெக் போன்ற நிறுவனங்கள், பிரச்னைக்குரிய புரோகிராம்கள் கூகுள் பிளே ஸ்டோரில் பதியப்படுகின்றனவா எனக் கண்காணித்து வந்தாலும், தொடர்ந்து அதிக எண்ணிக்கையில் இத்தளத்தில் புரோகிராம்கள் பதியப்படுவதால், இவற்றின் கண்காணிப்பையும் மீறி இந்த புரோகிராம்கள் பதியப்பட்டு வருவதாக, செமாண்டெக் அறிவித்துள்ளது.

கூகுளில் கவனமாக இருங்கள்!

#4

இது குறித்து கூகுள் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், பதியப்படும் புரோகிராம்களைக் கண்காணிப்பதில் கூடுதல் கவனம் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்துள்ளது.

கூகுளில் கவனமாக இருங்கள்!

#5

ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் இன்றைய புதிய பதிப்பு 4.3ல், இத்தகைய மால்வேர் புரோகிராம்களைக் கண்காணித்துத் தடுக்கும் தொழில் நுட்பம் இணைக்கப்படுவதாகவும் அறிவித்துள்ளது கூகுள்.

கூகுளில் கவனமாக இருங்கள்!

#6

எனவே, நீங்கள் டவுண்லோட் செய்தாலும், இன்ஸ்டால் செய்யப் படுகையில், இந்த வகை மால்வேர் புரோகிராம்களை புதிய ஆண்ட்ராட்ய்ட் சிஸ்டம் தடுத்துவிடும் என்று கூகுள் கூறுகிறது நண்பரே.

கூகுளில் கவனமாக இருங்கள்!

#7

எது எப்படியோ கூகுளில் நாம் சற்று கவனமாக இருந்து கொள்வோம்...

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்