விரைவில் வருகிறது கூகுள் நெக்சஸ் டேப்லெட்

By Karthikeyan
|
விரைவில் வருகிறது கூகுள் நெக்சஸ் டேப்லெட்

வெகு விரைவில் தனது புதிய டேப்லெட்டை அறிமுகம் செய்யப் போவதாக கூகுள் அறிவித்திருக்கிறது. அறிவிப்பு வந்ததிலிருந்து இந்த புதிய டேப்லெட்டைப் பற்றிய ஏராளமான வதந்திகளும் எதிர்பார்ப்புகளும் வந்து கொண்டிருக்கின்றன.

முதலில் இந்த புதிய டேப்லெட்டை சாம்சங் நிறுவனத்துடன் இணைந்து கூகுள் தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வந்தன. ஆனால் இப்போது ஆசஸ் நிறுவனத்துடன் சேர்ந்து தயாரிப்பதாக தகவல்கள் வருகின்றன.

எது எப்படி இருந்தாலும் கூகுளின் புதிய டேப்லெட் வருவது உறுதியாகிவிட்டது. அதோடு பல நிறுவனங்களோடு கூட்டணி அமைத்தும் கூகுள் இந்த வருடம் பல டேப்லெட்டுகளை களமிறக்க இருக்கிறது. இவற்றில் கூகுளின் சாப்ட்வேரும் கூட்டணி நிறுவனத்தின் ஹார்ட்வேரும் இருக்கும்.

ஆசசோடு இணைந்து வரும் இந்த புதிய டேப்லெட் கூகுளின் ஆன்லை சில்லறை ஸ்டோர்களில் மட்டுமே கிடைக்கும். அதன் மூலம் இந்த டேப்லெட்டின் விலையை கூகுள் சிறப்பாக கண்காணிக்க முடியும்.

இந்த புதிய டேப்லெட் ஒரு 7 இன்ச் திரையைக் கொண்டிருக்கும். அதுபோல் இதன் விலையும் குறையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு குறைந்த விலையில் வந்தால் மற்ற டேப்லெட் தயாரிப்பாளர்களும் தமது டேப்லெட்டுகளின் விலையை குறைக்க வேண்டியதிருக்கும்.

இந்த டேப்லெட் எப்போது விற்பனைக்கு வரும் என்று தெரியவில்லை. ஆனால் இந்த ஆண்டு மத்தியில் வரும் என்று தெரிகிறது. இதன் விலை ரூ.10000க்குள் இருக்கும் என்று தெரிகிறது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X