Home
Computer

இன்னும் 6 மாதங்களில் புத்தம் புதிய கூகுள் டேப்லெட்!

By Super

இன்னும் 6 மாதங்களில் புத்தம் புதிய கூகுள் டேப்லெட்!
நீண்ட காலமாகக் காத்திருந்த தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு இனிப்பான செய்தியை அறிவித்திருக்கிறது கூகுள் நிறுவனம். இன்னும் 6 மாதத்திற்குள் கூகுள் நெக்சஸ் என்று புதிய டேப்லட்டை களமிறக்கவிருப்பதாக அறிவித்திருக்கிறது. இந்த புதிய கூகுள் நெக்சஸ் டேப்லெட் ஆன்ட்ராய்டு ஐஸ் க்ரீம் சான்ட்விஜ் இயங்கு தளத்தில் இயங்கும்.

இந்த ஆன்ட்ராய்டு ஐஸ் க்ரீம் சான்ட்விஜ் இயங்கு தளம் மிகவும் மேம்படுத்தப்பட்ட விதத்தில் வரும். அதனால் இதன் இன்டர்பேசில் பட்டன்கள் இருக்காது. குறிப்பாக ஒரு புரோகிராமை நிறுத்த வேண்டும் என்றால் பக்கவாட்டில் விரலை வைத்துத் லேசாக அழுத்தினால் போதும். மேலும் இந்த வசதி பேட்டரியின் மின் பயன்பாட்டைக் கணிசமாகக் குறைக்கிறது.

மேலும் இந்த இயங்கு தளம் ஏராளமான பாதுகாப்பு வசதிகளைக் கொண்டுள்ளது. மேலும் அழைப்போ அல்லது செய்தியோ வரும் போது அனுப்புவரின் படம் இந்த இயங்கு தளத்தில் தெரியும். இந்த ஐஸ் க்ரீம் சான்ட்விஜ் இயங்கு தளத்தின் கீழ் ஒரு டோக்கும் உள்ளது.

கூகுளின் நெக்சஸ் டேப்லட்டைப் பற்றி இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவரவில்லை. ஒரே தகவல் என்னவென்றால் இந்த டேப்லெட் ஆன்ட்ராய்டு ஐஸ் க்ரீம் சான்ட்விஜ் இயங்கு தளம் மற்றும் குவாட் கோர் பிராசஸர்களைக் கொண்டிருக்கும்.

இந்த கூகுள் நெக்சஸ் டேப்லெட்டின் ஹார்டுவேரைப் பற்றி அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளிவரவில்லை. ஒரு வேளை ஆசஸ் அல்லது சாம்சங் நிறுவனத்தின் ஹார்டுவேருடன் இந்த டேப்லட் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இன்னும் 6 மாதத்தில் இந்த நெக்சஸ் டேப்லெட்டைச் சந்தைப் படுத்த இருப்பதாக கூகுள் அதிகார்ப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

எனவே இந்த புதிய கூகுள் நெக்சஸ் டேப்லெட்டைப் பெற ரசிகர்கள் இன்னும் 6 மாத காலம் காத்திருக்க வேண்டும். தரமான படைப்பை பெறுவதற்கு காத்திருப்பதிலும் ஒரு சுகம் இருக்கிறது அல்லவா!!!

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X