Home
Computer

இந்தியாவில் எப்போதும் கூகுள்தான் டாப்....!

By Keerthi

இன்றைக்கு உலக அளவில் இணையம் சார்ந்த பல்வேறு சேவைகளைத் தந்து வரும் கூகுள் நிறுவனமே, இந்திய இணைய வெளியில் அதிகமாக மக்களைக் கவர்ந்ததாக முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

இதுகுறித்து மேற்கொண்ட ஆய்வில் இது தகவல் நமக்குகிடைத்துள்ளது. இதனை அடுத்து பேஸ்புக் இரண்டாவது இடத்தையும், யாஹூ இணைய தளம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.

இந்திய இணையப் பயனாளர் எண்ணிக்கை, புயல் வேகத்தில் உயர்ந்து வருகிறது. சென்ற மாதம், பிராட் பேண்ட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை, 2 கோடியே45 லட்சமாக இருந்த நிலையில், இந்த மாதம் 2 கோடியே 80 லட்சத்து 40 ஆயிரமாக உயர்ந்தது.

இந்தியாவில் எப்போதும் கூகுள்தான் டாப்....!

சென்ற ஆண்டைக் காட்டிலும், இணையம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 32 சதவீதம் உயர்ந்ததால், இந்தியா, ஜப்பானை முந்திக் கொண்டு, உலக இணையப் பயனாளர் எண்ணிக்கையில், அமெரிக்கா, சீனாவிற்கு அடுத்தபடியாக, மூன்றாவது இடத்தைத் தன் 7 கோடியே 40 லட்சம் பயனாளர்களுடன் பிடித்துள்ளது.

இவர்களில் அதிகம் பேர் விரும்பும் நிறுவனமாக முதல் இடத்தில் கூகுள், இரண்டாவது இடத்தில் பேஸ்புக் உள்ளன. மூன்றாவது இடத்தில் யாஹூ இடம் பெறுகிறது.

விரைவில் பேஸ்புக் முதலிடத்தில் வரும் என்பதில் சிறிதும் ஐயமில்லை எனலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X