இனி கூகுளில் பணமும் அனுப்பலாம்

By Keerthi
|

இனி வெளிநாட்டில் உள்ளவர் எளிதில் உங்களுக்கு கூகுளின் ஜீமெயில் மூலம் பணம் அனுப்பலாம்.

நாம் கூகுள் இணையதளம் மூலம் கடிதங்கள், விழா நிகழ்ச்சி பத்திரிகைகள், ஆவணங்கள், போட்டோக்கள் ஆகியவற்றை அனுப்பி கொண்டிருந்த காலம் போய் இப்போது கூகுள் மூலம் பணத்தையும் அனுப்பும் வசதி வந்து விட்டது.

இதற்கு நீங்கள் ஜீமெயில் அக்கவுண்ட் வைத்திருந்தால் போதுமானது

கூகுள் இணையதளம் சர்வதேச அளவில் புகழ்பெற்றதாக உள்ளது. இமெயிலுக்கு அதிகளவில் இடவசதி அளித்து புரட்சி ஏற்படுத்தியது இதுதான்.

பின்னர் அதிவேக செயல்பாடு மூலமும் வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்தது. இதனால், பெரும்பாலான மக்கள் கூகுளின் ஜிமெயில் வாடிக்கையாளர்களாக உள்ளனர்.

இந்நிலையில், இந்நிறுவனம் இப்போது பணம் அனுப்பும் வசதியையும் அறிமுகம் செய்துள்ளது. சான்பிரான்சிஸ்கோவில் நடந்த ஐ.ஓ. கருத்தரங்கில் இதுதொடர்பான விவரங்களை கூகுள் நிறுவனம் அறிவித்தது.

இதோ கூகுளில் பணம் அனுப்பும் வசதியை பற்றிய விவரங்களை கீழே காணுங்கள்....

Click Here For New Smartphones Gallery

இனி கூகுளில் பணமும் அனுப்பலாம்

இனி கூகுளில் பணமும் அனுப்பலாம்

முதல்கட்டமாக அமெரிக்காவில் இச்சேவை உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும், விரைவில் உலகம் முழுவதும் இச்சேவை அறிமுகம் செய்யப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இனி கூகுளில் பணமும் அனுப்பலாம்

இனி கூகுளில் பணமும் அனுப்பலாம்

பணம் அனுப்ப விரும்புபவர்கள், கூகுள் இணையதளத்துடன் நேரடியாக தங்கள் வங்கிக் கணக்கை இணைத்து கொள்ளலாம் அல்லது கிரெடிட், டெபிட் கார்டு மூலமும் பணத்தை அனுப்பலாம்.

இனி கூகுளில் பணமும் அனுப்பலாம்

இனி கூகுளில் பணமும் அனுப்பலாம்

இதற்கு சேவை கட்டணமாக 2.9 சதவீதம் வசூலிக்கப்படும் என்று கூகுள் தெரிவித்துள்ளது.

இனி கூகுளில் பணமும் அனுப்பலாம்

இனி கூகுளில் பணமும் அனுப்பலாம்

யாருக்கு பணம் அனுப்ப விரும்புகிறோமோ அவருக்கு இமெயில் கடிதம் எழுதி, அதை பேப்பர் கிளிப் குறியுடனும், டாலர் குறியுடனும் இணைக்க வேண்டும்.

இனி கூகுளில் பணமும் அனுப்பலாம்

இனி கூகுளில் பணமும் அனுப்பலாம்

பின்னர் எவ்வளவு தொகையை அனுப்ப விரும்புகிறோம் என்பதை குறிப்பிட்டு செண்ட் பட்டனை தட்டினால் அடுத்த முனைக்கு பணம் சென்று சேர்ந்து விடும்.

இனி கூகுளில் பணமும் அனுப்பலாம்

இனி கூகுளில் பணமும் அனுப்பலாம்

இந்த சேவையில் பணம் பெறுபவர்கள் கூகுள் மெயிலில் கணக்கு வைத்திருக்காவிட்டால், குறைந்தபட்சம் கூகுள் வாலட்டில் கணக்கு வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் பணத்தை பெற முடியும்.

இனி கூகுளில் பணமும் அனுப்பலாம்

இனி கூகுளில் பணமும் அனுப்பலாம்

இனி உலகம் உண்மையில் நம் கையில் தான்

Click Here For New Concept Smartphones Gallery

Best Mobiles in India

Read more about:

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X