கூகுள் டாக்ஸில் உள்ள வசதிகள்...!

By Keerthi
|

இன்றைக்கு கட்டணங்கள் எதுவும் செலுத்தாமல் நம் பயன்பாட்டிற்குக் கிடைக்கக் கூடிய ஆபீஸ் அப்ளிகேஷன் கூகுள் டாக்ஸ் ஆகும்.

இதில் டாகுமெண்ட் களை உருவாக்கலாம், பிரசன்டேஷன் பைல்களை வடிவமைத்துப் பயன் படுத்தலாம். மேலும் ஸ்ப்ரெட்ஷீட், படங்கள், சார்ட்கள் என இது போன்ற அனைத்தையும் உருவாக்கிப் பதிந்து வைத்துப் பயன்படுத்தலாம்.

அது மட்டு மின்றி, நீங்கள் உருவாக்கும் பைல்களை அடுத்தவர்களும் பார்க்கலாம், திருத்தங் களை மேற்கொள்ளலாம் என எண்ணினால், அதற்கான அனுமதியை வழங்கும் வசதியை யும் கூகுள் டாக்ஸ் தருகிறது.

மேலே சொல்லப்பட்ட பைல்களுடன், வீடியோ பைலையும் கூகுள் டாக்ஸ் ஆபீஸ் தொகுப்பில் பதிந்து வைத்துப் பயன் படுத்தலாம். வீடியோ பைல்களை அப்லோட் செய்திட யு-ட்யூப், டெய்லி மோஷன் அல்லது பேஸ்புக் போன்ற தளங்கள் இருந்தாலும், கூகுள் டாக்ஸ் தொகுப்பின் மூலம் இவற்றைக் கையாள்வது சில கூடுதல் வசதிகளைத் தருகிறது.

கூகுள் டாக்ஸ் தொகுப்பில் வீடீயோ பைல்களை எப்படி அப்லோட் செய்வது மற்றும் அவற்றை பகிர்ந்து கொண்டு பயன்படுத்த, நம் நண்பர்களுக்கும் உறவுகளுக்கும் அனுமதி எப்படி வழங்குவது என்பதை இங்கு பார்க்கலாம்.

முதலில் கூகுள் டாக்ஸ் சென்று உங்கள் கூகுள் அக்கவுண்ட் பதிவுத் தகவல்கள் மூலம் லாக் இன் செய்திடவும். டாக்ஸ் தளம் கிடைத்தவுடன், க்ணீடூணிச்ஞீ என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். உடன் பைல்களை அப்லோட் செய்திட பைல் டயலாக் பாக்ஸ் கிடைக்கும்.

இப்போது உங்கள் டெஸ்க்டாப் அல்லது வேறு போல்டர்களில் இருக்கும் வீடியோ பைலை அப்படியே இழுத்து வந்து இந்த "File upload" பகுதியில் விட்டுவிடலாம். இவ்வாறு நீங்கள் அப்லோட் செய்திட விரும்பும் அனைத்து வீடியோ பைல்களையும் இழுத்துவிட்டவுடன், Start upload என்ற பட்டனில் கிளிக் செய்திடவும்.

#1

#1

இதற்கு முன் நீங்கள் இந்த வீடியோ பைல்களைக் குறிப்பிட்ட போல்டரில் சேவ் செய்திட விரும்பலாம். குறிப்பிட்ட ஒரு போல்டரைத் தேர்ந்தெடுத்து அமைக்க, Destination folder பட்டனில் கிளிக் செய்திடவும். பின்னர் நீங்கள் விரும்பும் போல்டரைத் தேர்ந்தெடுக்கவும்.

#2

#2

வீடியோ பைல் அப்லோட் செய்யப் படுகையில், பிரவுசரை மூடக்கூடாது. ஆனால், பிரவுசர் மூலம் வேறு வேலைகளில் ஈடுபடலாம்; இணைய தளங்களுக்குச் செல்லலாம்; இமெயில் செக் செய்து அவற்றிற்குப் பதில் அளிக்கலாம்; கம்ப்யூட்டரிலும் வேறு பணிகளைத் தொடரலாம்.

இனி உங்கள் கூகுள் டாக்ஸ் அக்கவுண்ட் மூலம் இந்த பைல்களை எப்படிப் பார்ப்பது மற்றும் மற்றவர் களுடன் பகிர்ந்து கொள்வது என்று பார்க்கலாம்.

#3

#3

வீடியோ பைல்களைக் காண, கூகுள் டாக்ஸ் சென்று, All documents என்பதில் கிளிக் செய்திடவும். பின்னர், அங்கு காட்டப்படும் டாகுமெண்ட்ஸ் பைல் பட்டியல் வரிசையில், நீங்கள் பார்க்க விரும்பும் வீடியோ பைல் மீது கிளிக் செய்திடவும்.

குறிப்பிட்ட வீடியோ, பிரவுசரின் புதிய விண்டோ ஒன்றில் இயங்கத் தொடங்கும். இதனை நீங்கள் காணலாம்; உங்கள் கம்ப்யூட்டருக்கு டவுண்லோட் செய்து கொள்ளலாம். டவுண்லோட் செய்து கொண்டால், அதனை இணைய இணைப்பின்றியே பார்க்கலாம்.

#4

#4

கூகுள் டாக்ஸ் தளத்தில் உள்ள வீடியோ பிளேயர், யு-ட்யூப் வீடியோ பிளேயர் போலவே காட்சி அளிக்கும். இங்கு ஒன்றை உணர்ந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அப்லோட் செய்யப்பட்ட வீடியோ பைல்களை, உங்கள் கூகுள் டாக்ஸ் அக்கவுண்ட் மூலமாகத்தான் பார்க்க முடியும்.

யு-ட்யூப் மூலம் பார்க்க முடியாது. உங்கள் நண்பர்களுடன் இந்த வீடியோ பைலைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என எண்ணினால், Sharing settings என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் இடத்தில், உங்கள் நண்பர் மற்றும் உறவினரின் இமெயில் முகவரியினை அமைக்கவும். ஆனால் வீடியோ பைல் பிரைவேட்டாக உங்களுக்கு மட்டுமே வேண்டும் எனில், Private என்ற பாக்ஸில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும்.

#5

#5

நீங்கள் இந்த வீடியோ பைல்களைப் பகிர்ந்து கொள்ள, யாருடைய இமெயில் முகவரிகளை அமைத்துள்ளீர்களோ, அவர் களுக்கு ஜிமெயில் தளத்திலிருந்து ஒரு அறிவிப்பு மெயிலாக அனுப்பப்படும். அதில் குறிப்பிட்ட வீடியோ பைலுக்கான லிங்க் அனுப்பப்படும்.

அவர்கள் தங்களுடைய கூகுள் அக்கவுண்ட் மூலம் சென்று, அந்த லிங்க்கில் உள்ள வீடியோ பைலைப் பார்வையிடலாம். தங்கள் கம்ப்யூட்டருக்கு டவுண்லோட் செய்து கொள்ளலாம். கூகுள் டாக்ஸ் MP4, FLV, MPEG, AVI, WMV, 3GP போன்ற பெரும்பாலான வீடியோ பார்மட்களை இயக்குகிறது. எனவே உங்கள் மொபைல் போனில் நீங்கள் எடுத்த வீடியோ பைல்களையும் உடனுடக்குடன், கூகுள் அக்கவுண்ட்ஸ் சென்று அனுப்பலாம். வீடியோ கன்வர்டர் எல்லாம் தேவை இருக்காது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X