கூகுளின் அனைத்து சேவைகளையும் வழங்கும் சாம்சங் நெக்சுஸ் 10 டேப்லெட்

By Karthikeyan
|
கூகுளின் அனைத்து சேவைகளையும் வழங்கும் சாம்சங் நெக்சுஸ் 10 டேப்லெட்

கூகுள் நிறுவனம் நேற்று ஒரு புதிய டேப்லெட்டை அறிமுகம் செய்து வைத்திருக்கிறது. சாம்சங் நெக்சுஸ் 10 என்று அந்த டேப்லெட்டிற்கு பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. 10 இன்ச் அளவில் வரும் இந்த டேப்லெட்டின் டிஸ்ப்ளே 300 டிபிஐ 2560×1600 பிக்சல் ரிசலூசனைக் கொண்டிருக்கிறது. அதனால் இந்த டிஸ்ப்ளே ஐபேடின் ரெட்டினா டிஸ்ப்ளேயைவிட மிகவும் தெளிவாக இருக்கும்.

இந்த சாம்சங் நெக்சஸ் 10 டேப்லெட் பல ஏராளமான தொழில் நுட்ப வசதிகளுடன் களமிறங்குகிறது. குறிப்பாக இந்த டேப்லெட் 1.7 ஜிஹெர்ட்ஸ் எ15 டூவல் கோர் ப்ராசஸருடன் வருகிறது. மேலும் இது ஆன்ட்ராய்டு 4.2 ஜெல்லி பீன் இயங்கு தளத்தில் வருவதால் இதன் செயல் திறனும் பக்காவாக இருக்கும் என்று நம்பலாம்.

கேமராக்களைப் பொருத்தவரை இந்த டேப்லெட் பின்பக்கம் 5எம்பி கேமராவையும் 1.9 முகப்புக் கேமராவையும் கொண்டுள்ளது. இந்த டேப்லெட் எல்லாவிதமான வீடியோ பார்மட்டுகளையும் குறிப்பாக எம்பிஇஜி4, எச்263, எச்264, விசி1, டிஐவிஎக்ஸ்விபி8, 3ஜிபிஎம்பி4, டபுள்யுஎம்வி(எஎஸ்எப்), எவிஐ, எப்எல்வி, எம்கேவி, வெப்எம் போன்றவற்றை சப்போர்ட் செய்கிறது. அதுபோல் எம்பி3, ஒஜிஜி, டபுள்யுஎம்எ, எஎசி, எசிசி+, இஎஎசி+, எஎம்ஆர்(என்பி,டபுள்யுபி), டபுள்யுஎவி, எசி-3 போன்றவற்றையும் சப்போர்ட் செய்கிறது.

இந்த டேப்லெட்டில் ஒரு சூப்பரான ஸ்டீரியோ ஸ்பீக்கர் உள்ளதால் இதில் அருமையாக பாடல் கேட்கலாம். மேலும் இந்த டேப்லெட்டில் கூகுளின் மொபைல் சேவைகளான கூகுள் க்ரோம், ஜிமெயில், ஜிடாக், கூகுள் மேப்ஸ், கூகுள் சேர்ஜ், வாய்ஸ் சேர்ஜ், கூகுள் நவ் கூகுள்+, யுடியூப், கூகுள் கரண்ட்ஸ், கூகுள் ப்ளே ஸ்டோர், கூகுள் ப்ளேபுக்ஸ், கூகுள் ப்ளே மூவிஸ் மற்றும் கூகுள் ப்ளே மேக்கசின்ஸ் போன்ற எல்லா சேவைகளையும் சப்போர்ட் செய்கிறது.

இணைப்பு வசதிகளுக்காக இந்த டேப்லெட்டில் வைபை, ப்ளூடூத், மைக்ரோ யுஎஸ்பி, மைக்ரோ எச்டிஎம்ஐ, போகோ பின், டூவல் சைட் என்எப்சி, ஜிபிஎஸ் + குளோனோஸ் போன்ற வசதிகளை இந்த டேப்லெட் கொண்டிருக்கிறது.

இந்த புதிய டேப்லெட் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின், கனடா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் உள்ள கூகுள் ப்ளே ஸ்டோர்களில் வரும் நவம்பர் 13 முதல் விற்கப்பட இருக்கின்றன. மேலும் இந்த டேப்லெட்டின் 16ஜிபி மாடல் 399 அமெரிக்க டாலர்களுக்கும், 32ஜிபி 499 அமெரிக்க டாலர்களுக்கும் விற்பனையாக இருக்கின்றன. இந்தியாவிற்கு இந்த டேப்லெட் எப்போது வரும் என்று தெரியாது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X