கூகுள் ஆசஸ் கூட்டணியில் உருவாகும் புதிய 7 இன்ச் டேப்லெட்!

கூகுள் அறிமுகப்படுத்த இருக்கும் புதிய டேப்லெட்டைப் பற்றி ஏற்கனவே பல உறுதி இல்லாத தகவல்கள் வந்திருக்கின்றன. இப்போது அந்த புதிய டேப்லெட் வரும் மே மாதத்தில் விற்பனைக்கு வந்துவிடும் என்று தெரிகிறது. மேலும் இந்த டேப்லெட்டை கூகுள் ஆசஸோடு இணைந்து தயாரிக்க இருக்கிறது என்பது புதிய செய்தியாகும்.
இந்த டேப்லெட் 7 இன்ச் திரையைக் கொண்டிருக்கும். மேலும் இது ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கும். மேலும் இதன் விலையும் குறைவாக இருக்கும் என்று தெரிகிறது. அதனால் இந்த டேப்லெட் அமேசான் கிண்டில் பயர் டேப்லெட்டுக்கு சரியான போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற சிறப்பு அம்சங்களைப் பற்றியத் தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை. மேலும் கூகுளின் ப்ளே ஸ்டோரிலிருந்து வரும் எல்லா ஆடியோ மற்றும் வீடியோ பைல்களை இந்த டேப்லெட் இயக்கும் சக்தி கொண்டது.
கூகுள் இந்த டேப்லெட்டைத் தயாரிக்க முதலில் எச்டிசி நிறுவனத்துடன் கூட்டணி வைக்க முயற்சித்தது என்ற வதந்தியும் உண்டு. ஆனால் இறுதியில் இப்போது ஆசஸிடம் கூட்டணி வைத்திருக்கிறது. ஆசஸ் ஏற்கனவே தனது டேப்லெட்டுகளில் கூகுளின் சாப்ட்வேர்களை கணிசமான அளவில் பயன்படுத்தி வருவதால் இந்த இருவரின் கூட்டணியும் சிறப்பாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
இந்த புதிய டேப்லெட்டின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும் குறைந்த விலையில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications