ஜி மெயிலில் பைல்களை விரைவில் தேட...!

Posted By:

இன்றைக்கு ஜி மெயில் என்பது பெரும்பாலும் அனைாவரும் பயன்படுத்தும் ஒரு மெயில் தளமாகும்.

இதுவரை நமக்கு வந்த இமெயில் செய்திகளைத் தேடல் மூலம் பெற்று, நாம் தேடும் மின்னஞ்சல் செய்திகளைப் பெற முடியும்.

ஏதேனும் இணைப்பினை மீண்டும் பெற வேண்டும் எனில், அனுப்பியவரின் பெயர் அல்லது அஞ்சல் செய்தியின் சொற்கள் வழி தேடிப் பெற்று வந்தோம்.

தற்போது, மெயில் உடன் இணைக்கப்பட்டுள்ள டாகுமெண்ட்கள் எந்த பார்மட்டில், (டாக், பி.டி.எப்.,) இருந்தாலும், அவற்றிலும் தேடலை நடத்தி நாம் விரும்புவதைப் பெறலாம்.

தேடல் கட்டத்தில் has:attachment என்றபடி அமைத்து, அதன் பின்னர், தேடலுக்கான சொல்லை அமைக்க வேண்டும்.

ஜி மெயிலில் பைல்களை விரைவில் தேட...!

எடுத்துக்காட்டாக, மோடி (Modi) என்ற சொல் உள்ள இணைப்பு கோப்பினை அறிய, has:attachment Modi எனத் தர வேண்டும்.

நீங்கள் இந்த தேடலை பி.டி.எப். பைல்களில் மட்டும் தேட விரும்பினால், has:attachment filename:PDF Modi என அமைக்கப்பட வேண்டும்.

முன்பு அட்டாச்மெண்ட் பைல்களில் தேட வேண்டும் எனில், அவை டெக்ஸ்ட் அல்லது எச்.டி.எம்.எல். பைல்களாக இருக்க வேண்டும்.

Word, Excel, and Powerpoint போன்ற பார்மட் கொண்ட பைல்களில் தேட முடியாது. தற்போது இந்த வசதி தரப்பட்டுள்ளது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot