Home
Computer

மார்க்கெட்டை ராஜ்யம் செய்ய வரும் புதிய நெட்புக்!

By Super

மார்க்கெட்டை ராஜ்யம் செய்ய வரும் புதிய நெட்புக்!
சிறப்பான கணினி பற்றிய தகவல்களை கொடுப்பதில் மின்னனு நிறுவனங்கள் சாமர்த்தியமாக செயலாற்றி வருகிறது. ஒரு கணினி என்ற இருந்த நிலை மாறி தற்போது அந்த கணினியையே எந்த அளவு நவீன தொழில்நுட்ப வசதிகளோடு கொடுக்க முடியும் என்பதில் தொழில் நுட்ப துறை மிக தீவிரமாக செயல்பட்டு வருகிறது.


தொழில்நுட்ப வசதிகள் மட்டுமின்றி கவர்ச்சிகரமான தோற்றத்துடன் கணினிகளும் உருவெடுத்துவிட்டன. இந்த வரிசையில் ஜிகாபைட் அறிமுகப்படுத்தியுள்ளள நெட்புக்தான் டி-1006. இந்த நெட்புக் இன்டெல் நிறுவனத்தின் பரிசோதனை அடிப்படையிலான செடார் சிப்செட்டுடன் வந்துள்ளது.

இது 10.1 இஞ்ச் மல்டி டச் கெப்பாஸிட்டிவ் திரையுடன் வந்துள்ளது. இதில், இன்டெல் நிறுவனத்தின் சமீபத்திய ஆட்டம் பிராசஸர் பொருத்தப்பட்டிருப்பதால் வேகத்தில் பின்னு பின்னு என்று பின்னும்.

இந்த புதிய நெட்புக் இரண்டு மாடல்களில் கிடைக்கும். ஒன்று 1024 x 600 பிக்ஸல் துல்லியத்தையும், இன்னொன்று 1366 x 768 பிக்ஸல் துல்லியத்தையும் தரும். இந்த துல்லியத்தை கொடுப்பதற்கு இதன் திரை பெரிய அளவில் ஒத்துழைக்கிறது.

இந்த ஜிகாபைட் நெட்புக் 3.26 பவுண்டு எடை கொண்டது . டிடிஆர் மெமரி ஸ்லாட் வசதியையும், 2.5 இஞ்ச் கொண்ட ஹார்டு டிரைவ் பே, புளூடூத் 2.1, யூஎஸ்பி 2.0/இஎஸ்ஏடிஏ கோம்போ, யூஎஸ்பி 3.0, எத்தர்நெட் போன்ற தொழில் நுட்பங்களின் சவுகரியத்தையும் பெற இந்த டி-1006 நெட்புக் வசதி இதில் கொடுக்கப்பட்டுள்ளது.

1.3 மெகா பிக்ஸல் கேமராவும், 1.5 வாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், மைக்ரோபோன் போன்ற நிறைய உபயோகங்களை பயன்படுத்த முடியும்.

3ஜி தொழில் நுட்ப வசதியையும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. டி-1006 நெட்புகினை பயன்படுத்தும் ஆர்வத்தினை இன்டல் ஆட்டம் பிராசஸர் அற்புதமாக வழங்குகிறது. கணினி உலகத்தில் போட்டிபோட இந்த டி-1006 நெட்புக் அனைத்து தகுதியையும் பெற்றிருக்கும் என்று தாராளமாக கூறலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X