'ஆட்டம்' பிராசஸருடன் ஆட்டம் போட வரும் புதிய நெட்புக்!

Posted By: Staff
'ஆட்டம்' பிராசஸருடன் ஆட்டம் போட வரும் புதிய நெட்புக்!
ஜிகாபைட் நிறுவனம் தற்போது இன்டல் செடார் ட்ரயல் சிப் திறன் கொண்ட புதிய டி1006 என்ற நெட்புக்கை களமிறக்குகிறது. இந்த நெட்புக் ஸ்டைல் கீபோர்டுடன் ஸ்வைவல் மூலம் இணைக்க முடியும். இந்த ஸ்வைவல் இதன் திரையை 180 டிகிரிக்கு சுற்ற வைக்கிறது.

இந்த சுற்றும் தன்மை கொண்ட திரையை மிக எளிதாக மடித்து கீபோர்டு மீது வைக்க முடியும். இது டேப்லெட் மற்றும் நெட்புக் இடைப்பட்ட கன்வென்ஷனல் நெட்புக் ரகத்தை சேர்ந்ததாக இருக்கிறது.

ஜிகாபைட் டி1006 இன்டெலின் ஆட்டம் செடார் ட்ரையல் சிப் கொண்டிருக்கிறது. மேலும் இது இன்டெலின் ஜிஎம்ஏ 3650 க்ராபிக்ஸ் கார்டையும் கொண்டிருக்கிறது.

இந்த ஜிகாபைட் டி1006ன் சிறப்புகளைப் பார்த்தால் அது மல்டி டச் கெப்பாசிட்டிவ் திரை மற்றும் 10.1 இன்ச் அளவு கொண்ட டிஸ்ப்ளேயைக் கொண்டுள்ளது. இது 2 வகையான திரை ரிசலூசனைக் கொண்டு வருகிறது.

அதாவது ஒன்று 1024 x 600 பிக்சல் ரிசலூசன் மற்றொன்று 1366 x 768 பிக்சல் ரிசலூசன் ஆகும். இதன் மொத்த பரப்பு 10.4x8.4x1.6 இன்ச் ஆகும். இதன் எடை 3.26 பவுண்டுகளாகும்.

இது டிடிஆர்3 மெமரி ஸ்லாட் மற்றும் 2.5 இன்ச் ஹார்டு டிரைவ் பே வசதியை கொண்டுள்ளது. இணைப்பு வசதிகளாக ப்ளூடூத் 2.1, யுஎஸ்பி 2.0/இஎஸ்எடிஎ கோம்ப், யுஎஸ்பி 3.0, எர்த்நெட் மற்றும் எச்டிஎம்ஐ & டி-சப் ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது.

அதுபோல் 1.3 மெகா பிக்சல் கேமரா மற்றும் ப்ளாஷ் கார்டு ரீடர், 1.5 வாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் உள்ளடங்கிய மைக்ரோபோன் ஆகிய வசதிகளையும் இந்த நெட்புக் வழங்குகிறது. இதன் விலை இன்னும் வெளியாகவில்லை.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot