Home
Computer

ஜிகாபைட்டின் 2 அதிரடி வீடியோ கேம் லேப்டாப்புகள்!

By Karthikeyan

ஜிகாபைட்டின் 2 அதிரடி வீடியோ கேம் லேப்டாப்புகள்!
இதுவரையில் யாரும் செய்யத் துணியாத ஒரு காரியத்தை ஜிகாபைட் நிறுவனம் செய்ய இருக்கிறது. அதாவது இதுவரை 13 இன்ச்சுக்கும் அதிகமான அளவு கொண்ட கேமிங் லேப்டாப்புகள் வந்ததில்லை. ஆனால் அந்த குறையை நிவர்த்தி செய்ய இருக்கிறது ஜிகாபைட் நிறுவனம். அதாவது இரண்டு புதிய கேமிங் லேப்டாப்புகளை அறிமுகப்படுத்தி இருக்கிறது. அவற்றின் பெயர்கள் முறையே அல்ட்ராபுக் என்று அழைக்கப்படுகின்ற யு2442 மற்றும் பி2542 ஆகும்.

இந்த இரண்டு கேமிங் லேப்டாப்புகளின் முக்கிய அம்சங்களும் மிக அபாரமாக உள்ளன. குறிப்பாக ஜிகாபைட் யு2442 லேப்டாப் சிறந்த கேமிங் அனுபவத்தைத் தருவதற்காக 14 இன்ச் திரையைக் கொண்டிருக்கிறது. இந்த அல்ட்ராபுக் 3ஜி இன்டல் கோர் i5/i7 யுஎல்வி ப்ராசஸரைக் கொண்டுள்ளது. இதன் திரையின் ரிசலூசன் 1600x900 ஆகும்.

இந்த லேப்டாப் ப்ளாஸ்டிக் சேஸிஸ் கொண்டிருப்பதால் இதன் எடை மிகக் குறைவாக இருக்கும். இந்த லேப்டாப் 2 யுஎஸ்பி 2.0 இணைப்பையும் மற்றும் ஒரு யுஎஸ்பி 3.0 போர்ட்டையும் கொண்டிருக்கிறது. மேலும் இந்த லேப்டாப்பில் எச்டிஎம்ஐ போர்ட்டும் உண்டு. அதுபோல் டி-சப் கனக்டர் மற்றும் எர்த்நெட் போர்ட் ஆகியவையும் இந்த லேப்டாப்பில் உண்டு. வீடியோ உரையாடல் செய்வதற்காக இந்த லேப்டாப் ஒரு வெப்காமைத் தாங்கி வருகிறது. மேலும் தகவல் பரிமாற்றத்திற்காக இந்த லேப்டாப் ப்ளூடூத் 4.0வையும் கொண்டுள்ளது. மேலும் வைபை 802.11என் இணைப்பு இந்த லேப்டாப்பில் உண்டு.

க்ராபிக்ஸ் வேலைப்பாடுகளுக்காக இந்த லேப்டாப் என்விடியா ஜிடி 240 எம் க்ராபிக்ஸ் அக்சிலரேசனைக் கொண்டிருக்கிறது. இதன் க்ராபிக்ஸ் மெமரி 2 ஜிபி ஆகும். இதன் பேக்லிட் கீபோர்டு மற்றும் அகலமான பெரிய தொடுதளம் வீடியோ கேம் விளையாடுவதற்கு மிகவும் வசதியாக இருக்கும். இதன் மெமரியை அப்க்ரேட் செய்ய முடியும்.

அடுத்ததாக ஜிகாபைட் பி2542 லேப்டாப்பின் முக்கிய அம்சங்களைப் பார்த்தால் இந்த லேப்டாப் க்வாட்கோர் ஐவி ப்ரிட்ஜ் கோர் ஐ7 ப்ராசஸரைக் கொண்டிருக்கிறது. மேலும் இது 1920 x 1080 பிக்சல் ரிசலூசன் கொண்ட 15.6 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளேயைக் கொண்டிருக்கிறது. க்ராபிக்ஸ் யூனிட்டிற்காக இந்த லேப்டாப் என்விடியா ஜிஇபோர்ஸ் 660எம் க்ராபிக்ஸ் ப்ராசஸரைக் கொண்டுள்ளது. மேலும் இதன் மெமிர அளவு 2ஜிபி ஆகும்.

இந்த லேப்டாப்பில் உள்ள இணைப்பு வசதிகளைப் பார்த்தால் இது யுஎஸ்பி 3.0 மற்றும் யுஎஸ்பி 2.0 போர்ட்டுகளைக் கொண்டுள்ளது. அதுபோல் எச்டிஎம்ஐ அவுட்புட் போர்ட்டும் இதில் உண்டு. எஸ்எஸ்டி மற்றும் எச்டிடி ட்ரைவ் சேமிப்பும் இதில் உண்டு. விருப்பமானதைத் தேர்ந்து கொள்ளலாம். குறிப்பாக டிஎச்எக்ஸ் தரச்சான்று பெற்ற கேமிங் அனுபவம் இந்த லேப்டாப்பில் உண்டு. ஒலி அமைப்பிற்காக 2 ஊபர் ஒலி சிஸ்டமும் இதில் உண்டு. மேலும் தகவல் பரிமாற்றத்திற்காக இந்த லேப்டாப் ப்ளூடூத் 3.0யும் வழங்குகிறது.

இந்த இரண்டு லேப்டாப்புகளும் வீடியோ கேமுக்கு உறுதியான உத்திரவாதத்தை வழங்குகின்றன. இவற்றின் விற்பனை மற்றும் விலை ஆகிய தகவல்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X