7இஞ்ச் கெப்பாஸிட்டிவ் திரையுடன் புதிய டேப்லட்:ஜிபைவ் ஆயத்தம்

Posted By: Staff

7இஞ்ச் கெப்பாஸிட்டிவ் திரையுடன் புதிய டேப்லட்:ஜிபைவ் ஆயத்தம்
சீன நிறுவனமான ஜிபைவ் ஒவ்வொரு மாதமும் இந்திய சந்தையில் ஏதாவது ஒரு புதிய கெட்ஜட்டை அறிவித்துக் கொண்டே இருக்கிறது. அந்த வகையில் தனது புதிய ஜிபைவ் டேப்லட்டை ரூ.10000க்கு அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த புதிய ஜிபைவ் டேப்லட் கூகுள் ஆன்ட்ராய்ட் ஓஎஸ்ஸில் இயங்குவதாகும்.

பீட்டலின் புதிய வரவான பீட்டல் மேஜிக்கிற்கு இந்த ஜிபைவின் டேப்லட் சரியான போட்டியாக இருக்கும் என நம்பலாம். ஏனெனில் பீட்டலை விட அதிகமான அம்சங்களை இந்த புதிய டேப்லட் கொண்டிருக்கிறது. ஜிபைவின் புதிய டேப்லட் 7 இன்ச் கப்பாசிட்டிவ் தொடுதிரையுடன் வருகிறது. இந்த மாத இறுதிக்குள் வந்து விடும் என்று எதிர்பார்க்கலாம்.

குறிப்பாக சில்லறை வர்த்தகம் மூலம் இந்த புதிய டேப்லட்டை பலதரப்பட்ட மக்களுக்கும் எடுத்துச் செல்ல ஜிபைவ் நிறுவனம் பெரும் முயற்சி எடுத்து வருகிறது. அதற்காக பல நிறுவனங்களுடன் வியாபார ஒப்பந்தம் செய்ய தயாராக இருக்கின்றது. அதற்காக சில்லரை வர்த்தகத்தில் ஈடுபடும் பெரிய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.

மேலும் ஜிபைவ் நிறுவனம் மின் பொருள்களான நெட்புக், லேப்டாப்புகள் மேலும் டிஜிட்டல் போட்டோ ப்ரேம் போன்றவற்றையும் தயாரிக்க திட்டமிட்டு வருகிறது. மேலும் ஜிபைவின் புதிய மீயூசிக் டிவைஸ்கள் விரைவில் வெளிவரும் என நம்பலாம்.

குறிப்பாக புதிய செய்தி என்னவென்றால் ரூ.10000க்கு ஜிபைவ் நிறுவனம் ஆண்ட்ராய்டு மற்றும் விண்டோஸ் கொண்ட 3ஜி டேப்லட்டுகளை அளிக்கவிருக்கிறது என்பதாகும். இந்த வருடம் ஜூன் மாதமே இதை அறிமுகப்படுத்த திட்டமிட்டிருந்தது. ஆனால் தொழில் நுட்பம் காரணமாக அது தாமதமாகிக் கொண்டிருக்கிறது.

ஜிபைவ் நிறுவனம் தமது 7 இன்ச் கப்பாசிட்டிவ் தொடுதிரை கொண்ட டேப்லட்டைப் பற்றி அதிகம் கவலை கொள்ளவில்லை. பீட்டலின் மாஜிக் வைபை மற்றும் 3ஜி வசதி கொண்டு ரூ.10000க்கு விற்கப்படுகிறது. அதனால் அதைவிட ஜிபைவ் நிறுவனம் சிறந்த பல அம்சங்களோடு தமது படைப்பை அறிமுகப்படுத்தும் என நம்பலாம். பொறுத்திறுந்து பார்ப்போம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot