மலிவு விலையில் விண்டோஸ் ஓஎஸ் கொண்ட ஜிபைவ் டேப்லட்

இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு இறுதியில் 7 இன்ச் மற்றும் 10 இன்ச் கொண்ட ஆண்ட்ராய்டு மற்றும் விண்டோஸ் இயங்கு தளங்களில் இயங்கும் டேப்லட்டுகளை அறிமுகப்படுத்த இருக்கிறது. குறிப்பாக இது விண்டோஸ் ஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு ஓஎஸ் பயன்படுத்துவோருக்காகவே இந்த டேப்லட் வருகிறது.
ஜிபைவ் நிறுவனம் இந்தியா மற்றும் சீனா ஏன் உலக சந்தைகளில் தனது பங்களிப்பை அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. இதன் இயங்கு தளம் நவீன விண்டோஸ் 8 இயங்கு தளமாகும். 7 இன்ச் மற்றும் 10 இன்ச் டேப்லட்டுகள் இரண்டுமே க்வல்காம் ஸ்நாப் ட்ராகன் சிப்செட்டில் இயங்குகிறது.
தமது தயாரிப்புகளில் தரம் அதிகமாக இருக்கும் என்று ஜிபைவ் அறிவித்திருக்கிறது. குறிப்பாக மலிவு விலை போன்களை நிறுத்தப் போவதில்லை என்றும் அறிவித்திருக்கிறது. மேலும் இந்த மலிவு விலை போன்களில் மேலும் பல புதிய வசதிகளை வழங்கப் போவதாக அறிவித்திருக்கிறது.
குறிப்பாக ஜிபைவின் டேப்லட்டுகளில் 3ஜி இணைப்பு இருக்கும். அதுபோல் வைபை மற்றும் ப்ளூடூத் இணைப்பும் இருக்கும். மேலும் இதில் ஜிபைவின் வழக்கமான் சின்னம் பொறிக்கப்பட்டிருக்கும். மேலும் இதில் 20 இலவச திரைப்படங்கள் மற்றும் 1000 இலவச வீடியோ கேம்கள் கொண்ட 4ஜிபி எஸ்டி கார்ட் கொடுக்கப்படும்.
ஆனால் இதைப் பற்றிய அதிகாரப் பூர்வமான தகவல்கள் வரவில்லை. ஆனால் இந்த புதிய டேப்லட் கண்டிப்பாக இந்த வருட இறுதிக்குள் வந்து விடும் என நம்பலாம்.
மேலும் இதன் விலையைப் பற்றி அதிகாரப் பூர்வமான அறிவிப்பு இன்னும் வரவில்லை. ஆனால் இதன் விலை மிகவும் குறைவாக இருக்கும் என நம்பலாம். அதனால் இந்த புதிய டேப்லட் வந்தால் இந்திய டேப்லட் சந்தை மிரண்டு விடும் என்பது உண்மை.


Click it and Unblock the Notifications