3டி தொழில்நுட்பத்துடன் கலக்க வரும் ஆசஸ் டேப்லெட்

Posted By: Staff
3டி தொழில்நுட்பத்துடன் கலக்க வரும் ஆசஸ் டேப்லெட்
ஆசஸ் அறிமுகப்படுத்த இருக்கும் இ பேட் மெமோ 3டி டேப்லெட்டைப் பற்றி இப்போது பரவலாக கருத்துக்கள் உலா வருகின்றன. இந்த டேப்லட்டின் அறிமுகம் பற்றி பரவலாக பேச்சுக்கள் எழுந்துள்ள நிலையில் இந்த டேப்லெட்டின் சிறப்பம்சங்களை இங்கே பார்க்கலாம்.

ஆசஸ் இ பேட் மெமோ 3டி டேப்லெட் 7 இஞ்ச் திரை கொண்ட டேப்லெட்.  இதன் முக்கிய சிறப்பு  3டி கண்ணாடிகளை அணியாமலே இதில் 3டி வீடியோ வசதியை அனுபவிக்க முடியும்.

ஏனெனில், பேரலாக்ஸ்-பேரியர் ஓவர்லே தொழில் நுட்பத்தை கொண்டிருக்கிறது. இந்த தொழில் நுட்பம் இதற்கு 3டி வசதியை வழங்குகிறது.  இது எல்சிடி 1280 X 800 ஐபிஎஸ் பேனல்களைக் கொண்டிருப்பதால் இதில் வரும் காட்சிகள் மிக பெரிதாக தெரியும்.

இந்த டேப்லட் ஆன்ட்ராய்டு 3.0 ஹன்கோம்ப் இயங்குதளத்தில் இயங்குகிறது. அதுபோல் டூவல் கோர் க்வல்காம் 1.2 ஜிஹெர்ட்ஸ் எம்எஸ்எம்8260 ஸ்நாப்ட்ரகான் ப்ராசஸரைக் கொண்டுள்ளது. மேலும் 1ஜபி கொண்ட ரேமையும் 32ஜிபி ஆன்போர்ட் சேமிப்பையும் வழங்குகிறது.

இணைப்பு வசதியைப் பார்த்தால் 3.5எம்எம் ஆடியோ அவுட், சிம் கார்ட் ஸ்லாட், மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் மற்றும் மைக்ரோ யுஎஸ்பி ஸ்லாட் போன்ற வசதிகளைக் கொண்டுள்ளது. மேலும் இது மினி எச்டிஎம்ஐ போர்ட்டுடன் எம்இஎம்ஒ 3டி வசதியைக் கொண்டிருப்பதால் 1080பி முழு எச்டி வீடியோவை வழங்கும். இது எல்இடி ப்ளாஷ் கொண்ட 5 மெகா பிக்சல் கொண்ட ரியர் கேமராவையும் மேலும் 1.2 மெகா பிக்சல் கொண்ட முகப்பு கேமராவையும் இது கொண்டுள்ளது.

ஆசஸ் இ பேட் மெமோ 3டி டேப்லட்டின் அறிமுகத் தேதியும் அதன் விலையும் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அடுத்த ஆண்டு சந்தைக்கு வரும் என்று நம்பலாம். ஏராளமான வசதிகளை கொண்டிருப்பதால் வாடிக்கையாளர்களின் மனங்களில் நீங்காத இடத்தை இந்த புதிய டேப்லெட் பிடிக்கும் என்பது நிச்சயம்

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot