புத்தம் புதிய ஆப்பிள் 3லேப்டாப்கள் : அடுத்தமாதம் அறிமுகம்.!
புதிய ஆப்பிள் லேப்டாப்கள் : இன்டெல் சிப்.!
ஆப்பிள் நிறுவனம் அடுத்தமாதம் புதிய 3லேப்டாப்களை அறிமுகப்படுத்துகிறது என ஆப்பிள் உலகளாவிய டெவலப்பர்கள் மாநாட்டில் ப்ளூம்பர்க் அறிக்கை வெளியிட்டார்.
ஆப்பிள் கணினியைப் பொறுத்த மட்டில் இந்தியாவில் பயன்படுத்துவோர் எண்ணிக்கை குறைவு, காரணம் இதன் விலை மிகவும் அதிகமாக உள்ளது. ஆப்பிள் கணினியில் ஆப்பிளால் உற்பத்தி செய்யப்படும் மென்பொருட்கள் மட்டுமே இயங்கும், மேலும் விண்டோஸ் மென்பொருட்கள் ஆப்பிள் கணினியில் வேலை செய்யாது. தற்போது வரும் ஆப்பிள் லேப்டாப்கள் பல திறமைகளை கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் லேப்டாப்:
ஆப்பிள் நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்துவது 12அங்குலமேக்புக், மேலும் இன்டெல் சிப் இதனுள் அடங்கும் என குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஆப்பிள்மேக் புக் பேட்டரி:
ஆப்பிள் மேக்புக் பொருத்தமாட்டில் இதன் பேட்டரி ஆயுள் நீண்ட நேரம் பயன்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. வெவ்வேறு இன்டெல் சிப் பயன்படுத்தி ஒரு புதிய மாடல் பேட்டரி தயாரித்துள்ளது ஆப்பிள் நிறுவனம்.

குறைந்த விலை:
ஆப்பிள் நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தும் லேப்டாப் விலை குறைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. மேலும் இவை பல்வேறு செயல்திறன் கொண்டிருப்பதால் லேப்டாப் சந்தையில் பல எதிர்பார்ப்பை கொண்டுள்ளது.

வன்பொருள்:
கடந்த சில ஆண்டுகளாக ஆப்பிள் டெவலப்பர்கள் புதிய வன்பொருள் ஏதும் தயாரிக்கவில்லை, ஆனால் ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு ஏதாவது ஒன்றைத் தொடங்க திட்டமிட்டுள்ளது - என மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது. ஸ்பீக்கர் மற்றும் ஒரு புதிய ஐபாட் புரோ போன்றவற்றை தயாரிக்க திட்டமிட்டுள்ளது.

யுனிக்ஸ்:
விண்டோஸ் "டாஸ்" இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டவை மேலும் ஆப்பிள் கணினிகள் "யுனிக்ஸ்" இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டவை.

மேக்புக் ப்ரோஸ்:
ஆப்பிள் நிறுவனம் கடந்த இலையுதிர்காலத்தில், ஆப்பிள் புதிய மேக்புக் ப்ரோஸை அறிமுகப்படுத்தியது, தற்போது அறிமுகப்படுத்தப்படும் மேக்புக் பல எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளது. விற்பனையில் அதிக லாபாம் பெரும் என மாநாட்டில் கூறப்பட்டது.


Click it and Unblock the Notifications