இன்ஸ்பான் வழங்கும் அசத்தலான பேனா டேப்லெட்டுகள்!

Posted By: Staff
இன்ஸ்பான் வழங்கும் அசத்தலான பேனா டேப்லெட்டுகள்!
இன்ஸ்பான் இன்போடெக் நிறுவனம் உலக அளவில் பிரசித்தி பெற்ற ஐடி நிறுவனமாகும். அந்நிறுவனம் தற்போது பேனா டேப்லெட்டுகளை அறிமுகப்படுத்த முடிவெடுத்திருக்கிறது.

இந்த வகை டேப்லெட்டுகள் வயர் மற்றும் வயர்லஸ் வசதிகளைக் கொண்ட 2 மாடல்களில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மவுஸ் பேனா மற்றும் கிட்ஸ் பேனா டேப்லெட்டுகள் போன்றவையும் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிகிறது.

தற்போது ஜி-பென் எப் 350, ஈஸிபென் எம்506 மற்றும் ஜி-பென் எம்712எக்ஸ் போன்ற டேப்லெட்டுகள் சந்தையில் கிடைக்கின்றன. இவற்றைத் தவிர்த்து ஈஸிபென் எம்610எக்ஸ் மாடல் மற்றும் மவுஸ்பென் ஐ603எக்ஸ் போன்ற டேப்லெட்டுகளும் உள்ளன.

ஜி-பென் எப் 350 மிகவும் மெல்லிய டேப்லெட்டாகும். இதன் மொத்த பரப்பு 3 x 5  இன்ச் ஆகும். இது யுஎஸ்பி இன்டர்பேஸைக் கொண்டுள்ளது. இதன் விலை ரூ.3200 ஆகும்.

அடுத்ததாகப் பார்த்தால் ஈஸிபென் எம்506ன் வேலை செய்யும்  பரப்பு 5 x 6  இன்ச் ஆகும். இது சூம், எரேஸ் மற்றும் அன்டு பட்டன்களைக் கொண்டிருக்கிறது. அதுபோல் இதில் பேட்டரி ப்ரீ கார்டுலெஸ் பேனாவையும் பயன்படுத்த முடியும்.

இதன் மொத்த எடை 420 கிராம்களாகும். இதன் மொத்த பரப்பு 27.9 x 19.76 x 0.9 இன்ச் ஆகும். இதன் விலை ரூ.6,260 ஆகும்.

ஜி-பென் எம்712எக்ஸ் ஒரு மல்டி மீடியா டேப்லெட் ஆகும். இது 12 x 7 இன்ச் டூவல் மோட் ஸ்பெசிபிகேசனைக் கொண்டுள்ளது. இது யுஎஸ்பி இன்டர்பேசைக் கொண்டுள்ளது.

ஈஸிபென் எம்610எக்ஸ் வேலை செய்யும் பகுதி 6 x 10 இன்ச் அளவாகும். இது 4 எக்ஸ்ப்ரஸ் கீகளைக் கொண்டுள்ளது. இது சாப்ட்வேர் ஷார்ட் கட்டுகளைக் கொண்டுள்ளதால் இதை இயக்குவது மிக எளிதாக இருக்கும். இதில் சிடி அல்லது டிவிடி-ரோம் டிரைவ் உள்ளது.

மவுஸ்பென் ஐ608எக்ஸ் ஒரு க்ராபிக்ஸ் டேப்லெட் ஆகும். இதன் வேலை செய்யும் பகுதி 6 x 8 இன்ச் அளைவக் கொண்டது. அதன் ரிசலூசன் 2560எல்பிஐ ஆகும். இதன் அழுத்த சென்சிட்டிவிட்டி 1024 ஆகும். ஈஸிபென் எம்610எக்ஸ் ரூ.6600 ஆகும். மவுஸ்பென் ஐ608எக்ஸின் விலை ரூ.3699 ஆகும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot