Home
Computer

கார்மின் வழங்கும் புதிய வழிகாட்டும் சாதனங்கள்!

By Karthikeyan
கார்மின் வழங்கும் புதிய வழிகாட்டும் சாதனங்கள்!

கார்மின் கார்பரேசன் இந்தியாவில் இரண்டு புதிய மேப் நாவிகேசன் சாதனங்களைக் களமிறக்க இருக்கிறது. இந்த புதிய சாதனங்களுக்கு நுவி 40எல்எம் மற்றும் நுவி 50எல்எம் என்று பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. இந்த சாதனங்கள் மூலம் விரும்பும் இடங்களை இந்த சாதனங்களில் உள்ள மேப்களில் தேடிப் பார்த்து அந்த இடங்களுக்கு பத்திரமாகவும் அதே நேரத்தில் மிக விரைவாகவும் சென்று சேர முடியும்.

இந்த இரண்டு நாவிகேசன் சாதனங்களுமே மலிவு விலையில் வருகின்றன. 40எல்எம் சாதனம் 4.3 இன்ச் டிஸ்ப்ளேயையும் அதே நேரத்தில் 50எல்எம் 5 இன்ச் டிஸ்ப்ளேயையும் கொண்டுள்ளன. இந்த இரண்டு சாதனங்களும் ஆயுள்கால இலவச மேப் அப்க்ரேடுகளைக் கொண்டுள்ளன. இந்த அப்க்ரேடுகளை கார்மின் நுமேப்ஸ் லைப்டைம் மூலம் இலவசமாகச் செய்ய முடியும்.

இதுவரை கார்மின் ஏராளமான பொருள்களை மக்களுக்கு விற்பனை செய்திருக்கிறது. தனது பொருள்கள் பெரும்பாலான மக்களை சென்றடைய வேணடும். அதே நேரத்தில் புதிய புதிய தொழில் நுட்பங்களை மக்களுக்கு அளித்துக் கொண்டிருக்க வேண்டும். அவை தரமாகவும் மலிவாகவும் இருக்க வேண்டும். மேலும் மக்கள் தாங்கள் விரும்பும் இடங்களுக்கு பாதுகாப்பாக மற்றும் விரைவாக செல்ல வேண்டும் இதுவே கார்மின் கார்பரேசனின் நோக்கம் என்று அதன் ஆசியாவிற்கான தலைமை மேலாளர் திரு. டோனி ஆன் கூறுகிறார்.

இந்த புதிய சாதனங்களில் சிங்கப்பூர் மற்றும் மலேசியா மேப்புகளும் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் ஜங்சன் வியூவ், ஹைவே மோட், ஹவுஸ் சேர்ச் மற்றும் கோ டூ ஹோம் அல்லது ஆபிஸ் போன்ற வசதிகளும் இவற்றில் உள்ளன.

எல்எம்40 ரூ.8450க்கும் எல்எம்50 ரூ.9990க்கும் விற்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X