Home
Computer

புதிய தொழில் நுட்பத்தை லேப்டாப்பில் புகுத்தும் ஆசஸ்!

By Karthikeyan
புதிய தொழில் நுட்பத்தை லேப்டாப்பில் புகுத்தும் ஆசஸ்!

கேமிங் சப்போர்ட் உள்ள டேப்லெட்டுகள் மற்றும் ஸ்மார்ட்போன்களுக்கு அமோக வரவேற்பு உள்ளது. அதுபோல் சிறந்த க்ராபிக்ஸ் ப்ராசஸிங் யூனிட் கொண்ட லேப்டாப்புகள் விற்பனையில் கொடி கட்டி பறக்கின்றன. அதனால் இப்போது நிறைய நிறவனங்கள் கேமிங் சப்போர்ட் கொண்ட டேப்லெட் மற்றும் லேப்டாப்புகளைத் தயாரிப்பதில் மிகத் தீவரமாக இருக்கின்றனர். ஆனால் அப்படிப்பட் டிவைஸ்களுக்கு மிகவும் சக்தி வாய்ந்த சாப்ட்வேர்கள் தேவைப்படும்.

மிகவும் சக்தி வாய்ந்த டிவைஸ்களைப் பார்த்தால் ஆசஸை மறக்க முடியாது. ஏனெனில் ஆசஸ் ட்ரான்ஸ்பார்மர் ப்ரைம் ஒரு மிகவும் சக்தி வாய்ந்த டேப்லெட் ஆகும். இந்த டேப்லெட் நடுத்தர மற்றும் உயர் தர கேம்களை சப்போர்ட் செய்கிறது. தற்போது கேமிங் வசதியை முழுமையாக சப்போர்ட் செய்யும் புதிய நோட்புக்கைத் தயாரிக்க இருக்கிறது ஆசஸ். அந்த நோட்புக்கில் மைக்ரோசாப்ட்டின் கினக்ட் மோசன் சென்சிங் கன்ட்ரோலர் என்ற தொழில் நுட்பத்தைப் பயன்படுத்த இருக்கிறது.

குறிப்பாக புதிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவதில் ஆசஸ் பல முறை வெற்றி பெற்றிருக்கிறது. குறிப்பாக லேப்டாப்பில் என்விடியாவின் 3டி விஷன் சென்சாரைப் பயன்படுத்துவது ஒரு கடினமான காரியம் ஆகும். ஆனால் அதை தனது நோட்புக் பேசிலில் மிக எளிதாகப் பயன்படுத்தியது.

ஆகவே இப்போது ஆசஸ் கினக்ட் தொழில் நுட்பத்தை தனது நோட்புக்கில் பயன்படுத்த இருக்கிறது. குறிப்பாக தனது பேசில் நோட்புக்கில் உள்ள கண்ட்ரோலரில் உள்ள கேமரா மற்றும் சென்சார்களை அகற்றி விட்டு இந்த புதிய தொழில் நுட்பத்தை இணைக்க இருக்கிறது. எனவே வரும் புதிய டேப்லெட் நிறைய சென்சார்களோடு மிகவும் ஸ்டைலாக இருக்கும். மேலும் இந்த லேப்டாப் விண்டோஸ் 8 இயங்கு தளத்தில் இயங்கும்.

இந்த கினக்ட் தொழில் நுட்பத்தின் மூலம் ஆசஸின் லேப்டாப்பில் அருமையாக கேம் விளையாடலாம். எனவே கினக்ட் தொழில் நுட்பத்துடன் வரும் ஆசஸின் புதிய லேப்டாப்பை விரைவில் எதிர்பார்க்கலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X