டேப்லெட், லேப்டாப் சந்தையில் அடியெடுத்து வைக்கும் ஜிபைவ்

Posted By: Staff

டேப்லெட், லேப்டாப் சந்தையில் அடியெடுத்து வைக்கும் ஜிபைவ்
இப்போது வரும் புதிய தொழில் நுட்பங்களுக்கு மக்களிடையே அமோக வரவேற்பு உள்ளது. குறிப்பாக பணக்கார வர்க்கம் மட்டும் இதை விரும்புவதில்லை. மாறாக நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களும் இந்த தொழில் நுட்பங்களை விரும்பி வரவேற்கின்றனர்.

மக்கள் தொழில் நுட்பங்களை அனுபவிப்பதில் அலாதி ஆர்வம் காட்டுகின்றனர். இதைப் புரிந்து கொண்ட சீனாவைச் சேர்ந்த ஜிஃபைவ்நிறுவனம் சென்னையை சேர்ந்த முனாத் குழுமத்துடன் வர்த்தக ஒப்பந்தம் கொண்டு புதிய டேப்லட்டுகள் மற்றும் லேப்டாப்புகளை தயாரித்து சீன மற்றும் இந்திய மற்றும் உலக நாட்டு சந்தைகளில் சந்தைப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த டிவைஸ்கள் உயர்தர மற்றும் குறைந்த தரமுடன் வர இருக்கின்றன.

இந்தியாவிற்கு முன்பாக சீனாவில் இந்த லேப்டாப் மற்றும் டேப்லட்டுகளை களமிறக்க ஜிஃபைவ்திட்டமிட்டிருக்கிறது. ஜிபைவின் வின்ஸ்டன் சாங் கூறும்போது தற்போது 3 அல்லது 4 லேப்டாப் மற்றும் டேப்லட் மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டிருப்பதாக கூறுகிறார்.

ஏற்கனவே ஜிஃபைவ்குறைந்த விலை மொபைல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தி நல்லதொரு இடத்தைப் பெற்றிருக்கிறது. அதனால் ஜிபைவின் லேப்டாப் மற்றும் டேப்லட்டுகள் இந்தியாவில் பிரபலமாக கஷ்டப்படத் தேவை இல்லை.

ஜிபைவும் முனாத் குரூப்பும் இணைந்து முனாத் ஜிஃபைவ்டெலிகாம் லிமிடெட் என்ற நிறுவனத்தை ஆரம்பித்திருக்கின்றன. அந்த புதிய கூட்டு நிறவனம் மூலம் ரூ.2000 முதல் ரூ.16,000 வரையிலான தொடுதிரை வசதி கொண்ட ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்த இருக்கிறது.

இந்த நிறுவனம் விரைவில் 10 டிவைஸ்களை களமிறக்க முடிவெடுத்திருக்கிறது. கடந்த 3 மாத இடைவெளியில் ஜிஃபைவ்நிறுவனம் பங்களாதேஷ், நேபாளம், மற்றும் ஸ்ரீலங்கா போன்ற நாடுகளில் ஒரு நிலையான இடத்தைப் பிடித்திருக்கிறது.

மேலும் அந்நிறுவனம் தனது தயாரிப்புகளை வட அமெரிக்கா, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா சந்தைகளில் அறிமுகப்படுத்த இருக்கிறது. மேலும் இந்த புதிய முனாத் ஜிஃபைவ்நிறுவனம் வெர்ச்சுவல் நெட்வொர்க் ஆபரேட்டர் சந்தயிலும் நுழையத் திட்டமிட்டிருக்கிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்