எதிர்கால டிஜிட்டல் தொழில்நுட்பம் இதுதான் பாஸ்

Written By:
  X

  இன்றைக்கு டிஜிட்டல் உலகில், அதன் தொழில் நுட்பத்தின் பரிமாணங்களும், அவற்றைப் பயன்படுத்தும் சாதனங்களும் அதிவேகமாக உயர்ந்து வருகின்றன.

  இன்றைக்குப் பயன்பாட்டில் இருக்கின்ற ஒரு சாதனம், குறுகிய காலத்திலேயே மிகப் பழைய சாதனமாக, எந்த வகையிலும் பயனற்ற ஒன்றாக மாறி வருகிறது.

  நம்மில் பலருக்குத் தங்கள் மொபைல் எண்களே மறந்து போகின்றன. நமக்கு நெருக்கமான மனைவி மற்றும் நம் குழந்தைகளின் தொலைபேசி எண்களைக் கூட நினைவில் வைக்காமல், அவற்றைப் பயன்படுத்தும் சாதனங்களையே நம்பி இருக்கிறோம்.


  கம்ப்யூட்டர்களின் இடத்தில் லேப்டாப், டேப்ளட் பிசி, ஸ்மார்ட் போன் என சுழன்று வருகின்றன. இணையத் தொடர்பின் வேகம் மின்னலுக்கு ஒப்பாகி வருகிறது.

  டிஜிட்டல் திரைகள் விரிந்து, நம் விழிகளின் அசைவின் கட்டளைகளை ஏற்று செயல்படுத்தும் நாள் இன்னும் சில மாதங்களில் வந்துவிடும். இவ்வாறு விரியும் டிஜிட்டல் சாதனங்கள் இனி எப்படி அமையும் என்பதை கீழே பாருங்கள்......

  Click Here For New Tablets And Laptops Gallery

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  எதிர்கால டிஜிட்டல் தொழில்நுட்பம்


  லேப்டாப் கம்ப்யூட்டர்களுக்கும் டேப்ளட் பிசிக்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு வேகமாகக் குறைந்து வருகிறது. அமைதியாக இணைய உலா வர, மின்னஞ்சல் நிர்வகிக்க, பாட்டு கேட்க, படம் பார்க்க என டேப்ளட் பிசிக்கள் பயன்படுத்தப்பட்டன, லேப்டாப் கம்ப்யூட்டர்கள், டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில் மேற்கொள்ளப்படும் அனைத்து திறன் சார்ந்த செயல்பாடுகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன.

  எதிர்கால டிஜிட்டல் தொழில்நுட்பம்

  இவற்றின் மூலம் அறிவுத் திறனாக்கப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப் படுகின்றன. ஆனால், அண்மைக் காலங்களில், லேப்டாப் மற்றும் டேப்ளட் பிசிக்களின் செயல்பாடுகளுக்கிடையே உள்ள வேறுபாடுகள் மறைந்து வருகின்றன.

  எதிர்கால டிஜிட்டல் தொழில்நுட்பம்

  லேப்டாப் மற்றும் டேப்ளட் பிசிக்களுக்கிடையே, இயக்க முறை ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் இணைவாய் இருக்கும் வகையில் மைக்ரோசாப்ட் தந்த விண்டோஸ் 8 இதற்கு முதல் பாலத்தை அமைத்துள்ளது. எதிர்காலம் இனி டேப்ளட் பிசிக்களுடையதாய் இருக்கும்.

  எதிர்கால டிஜிட்டல் தொழில்நுட்பம்

  13 அங்குல திரை கொண்ட டேப்ளட் பிசிக்கள் இந்த பணியை மேற்கொள்ளும். செயல்பாட்டிற்கு ஈடு கொடுக்கும் வகையில் திறன் கூடிய பிளாஷ் ட்ரைவ்கள் வரத் தொடங்கி உள்ளன. பற்றாக் குறைக்கு ஈடு கொடுக்க க்ளவ்ட் கம்ப்யூட்டிங் முறை கை கொடுக்கிறது.

  எதிர்கால டிஜிட்டல் தொழில்நுட்பம்


  இதற்கான இணைய இணைப்பு வேகமும் முறைகளும், எண்ணிப் பார்க்க முடியாத வேகத்தில் அமைந்து வருகின்றன.

  எதிர்கால டிஜிட்டல் தொழில்நுட்பம்

  கூகுள் ஒரு நகரம் முழுமையும் தற்போது உள்ள இணைய வேகத்தினைக் காட்டிலும் 400 மடங்கு வேகத்தில் இணைய இணைப்பு தந்து, இந்த தொழில் நுட்பம் சாத்தியமே என்று காட்டியுள்ளது.

  எதிர்கால டிஜிட்டல் தொழில்நுட்பம்

  வீட்டில் ஒரு டெஸ்க் டாப் பெர்சனல் கம்ப்யூட்டரை வைத்துக் கொண்டு, அதனைச் சார்ந்த அனைவரும் கையடக்க டேப்ளட் பிசிக்களைத் தூக்கிச் சென்று, பெர்சனல் கம்ப்யூட்டருடன் இணைப்பு பெற்று தங்கள் பணியை முடிக்க இயலும்.

  எதிர்கால டிஜிட்டல் தொழில்நுட்பம்


  இந்த ஆண்டிலும், இனி வரும் ஆண்டுகளிலும் வேகமான மாற்றத்தைக் காண இருப்பது டேப்ளட் பிசிக்களே. இந்த ஆண்டில், 16 கோடியே 59 லட்சம் டேப்ளட் பிசிக்கள் விற்பனை செய்யப்படும் (2012ல் இது 11.71 கோடி) என ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.

  எதிர்கால டிஜிட்டல் தொழில்நுட்பம்


  இது 2016ல், 26 கோடியே 14 லட்சமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ப்ராசசர் வரிசையிலும், ஏ.ஆர்.எம். ப்ராசசர் இவற்றிற்கு ஈடு கொடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

  எதிர்கால டிஜிட்டல் தொழில்நுட்பம்

  விண்டோஸ் 8 டேப்ளட் பிசிக்களில் இவற்றின் சிறப்பான செயல்பாடு நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த ஆண்டு டேப்ளட் பிசிக்கள் சந்தையில், விண்டோஸ் 8 இயக்கத்தில் இயங்கும் டேப்ளட் பிசிக்கள் தங்கள் சிறப்பை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.

  எதிர்கால டிஜிட்டல் தொழில்நுட்பம்

  அதிகம் வியக்கத்தக்க வகையில் தொழில் நுட்ப முன்னேற்றம், மொபைல் ஸ்மார்ட் போன்களில் ஏற்பட்டு வருகிறது.

  எதிர்கால டிஜிட்டல் தொழில்நுட்பம்

  இவற்றில் என்ன எதிர்பார்க்கலாம் என்று பட்டியல் இடலாம். முதலாவதாக, வயர்லெஸ் சார்ஜிங். எந்தவித இணைப்பும் இல்லாமல், இந்த போன்களை சார்ஜ் செய்திடலாம்.

  எதிர்கால டிஜிட்டல் தொழில்நுட்பம்

  HTC Droid DNA மற்றும் Nokia Lumia 920 ஆகியவை இதற்கான எடுத்துக்காட்டுக்களாகத் தற்போது உள்ளன.

  எதிர்கால டிஜிட்டல் தொழில்நுட்பம்

  அடுத்து, குவாட் கோர் ப்ராசசர்கள் மொபைல் போன்களில் பயன்படுத்தப்படுவது பெருகும்.

  எதிர்கால டிஜிட்டல் தொழில்நுட்பம்

  ஸ்மார்ட் போன்களில், அதிவேக செயல்பாடுகளை மேற்கொள்ளவும், கூடுதல் வேகத்தில் விளையாட வேண்டிய கேம்ஸ்களுக்கு இணையாக இயங்கவும், ஹை டெபனிஷன் வீடியோ படங்களைப் பார்ப்பதற்கும் இவை பெரும் அளவில் உதவிடும்.

  எதிர்கால டிஜிட்டல் தொழில்நுட்பம்


  அடுத்து, மொபைல் போன்களின் திரைகளைக் குறிப்பிடலாம். 5 அங்குல திரை என்பது இன்றைய நடைமுறையாகி வருகிறது

  எதிர்கால டிஜிட்டல் தொழில்நுட்பம்

  இன்னும் இதில் புதிய தொழில் நுட்பம் கொண்டு வரப்பட்டு, இதன் பயன்பாட்டினை அதிகப்படுத்தும்.

  எதிர்கால டிஜிட்டல் தொழில்நுட்பம்

  எதிர்கால டிஜிட்டல் தொழில்நுட்பம்

  எதிர்கால டிஜிட்டல் தொழில்நுட்பம்

  எதிர்கால டிஜிட்டல் தொழில்நுட்பம்

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  Click Here For New Concept Gadgets Gallery

  Read more about:

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more