வெவ்வேறு பைல் பார்மேட்கள் முழு விவரம்

|

இண்டர்நெட் அகராதியில் பைல் பார்பமேட் என்பது கம்ப்யூட்டரில் சேமிக்க தகவல் என்கோட் செய்யப்பட்டிருக்கும் வழிமுறை ஆகும். இது டிஜிட்டல் ஸ்டோரேஜ் முறையில் தகவல் எவ்வாறு என்கோடு செய்யப்பட்டுள்ளது என்பதை விவரிக்கும்.

வெவ்வேறு பைல் பார்மேட்கள் முழு விவரம்

பைலினுள் தகவல் எவ்வாறு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது என்பதே பைல் பார்மேட் ஆகும். நாம் பயன்படுத்தும் மென்பொருள் தகவல்களை புரிந்து கொண்டு சரியான முறையில் இயக்க வேண்டும். வெவ்வேறு வகையான பைல் பார்பமேட்கள் உள்ளன, இவற்றில் அதிகம் பயன்படுத்தப்படுவது .doc, .mp3, .pdf ஆகும்.

JPG

JPG

கம்ப்யூட்டரில் அதிகம் பயன்படுத்தப்படும் பார்மேட்களில் இதுவும் ஒன்று. இந்த பார்மேட் புகைப்படங்களை 16 மில்லியன் அளவு வெவ்வேறு ஹியூஸ்களை பயன்படுத்தி அவற்றை கம்ப்ரெஸ் செய்கிறது. இந்த பார்மேட் புகைப்படங்களுக்கு மென்மையான தோற்றத்தை டோன் மற்றும் கலர் மூலம் வித்திாசப்படுத்துகிறது.

GIF

GIF

வெப் கிராபிக்ஸ்களில் அதிகம் பயன்படுத்தப்படும் பார்மேட்டாக இது இருக்கிறது. இது அனிமேஷன் ஜிஃப்களை கொண்டுள்ள பார்மேட் ஆகும். மேலும் இது பிக்சல் சார்ந்த பார்மேட்களை கொண்டு அனிமேஷனை இயக்குகிறது.

PNG

PNG

இது முந்தைய பார்மேட்களுக்கு மாற்றானது. பொதுவாக புகைப்படங்களுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த பார்மேட் பயன்படுத்த எவ்வித அனுமதியும் தேவையில்லை. இது டெஃப்லேஷன் எனும் லோஸ்லெஸ் முறையில் தகவல்களை கம்ப்ரெஸ் செய்கிறது. JPG-உடன் ஒப்பிடம் போது PNG தகவல்களை சேமித்து வைக்க அதிக பயனுள்ளதாக இருக்கிறது.

RAW

RAW

இது டிஎஸ்எல்ஆர் போன்ற சாதனங்களில் உள்ள இமேஜ் சென்சார் மூலம் மினிமலி பிராசஸ்டு தகவல்களை கொண்டுள்ளது. பொதுவாக முழுமையில்லாத தகவல்களை கொண்டிருப்பதாலேயே இது RAW என அழைக்கப்படுகிறது.

MP3

MP3

MP3 என்பது சவுண்ட்களை கம்ப்ரெஸ் செய்யும் வழக்கமான வழிமுறை ஆகும். இதில் சத்தத்தின் தரத்தை குறைக்காமல் அதன் அளவை குறைக்க முடியும். இது அனைவராலும் பரவலாக பயன்படுத்தும் பார்மேட்களில் ஒன்றாகவும் இருக்கிறது.

MP4

MP4

இந்த பார்மேட் ஆடியோ மற்றும் வீடியோக்களை பதிவு செய்யும் திறன் கொண்டுள்ளது. இது கன்டெயினர் பார்மேட் என்பதால் இதை கோடிங் செய்ய எவ்வித வழிமுறையும் இல்லை. மாறாக ஆடியோ அல்லது வீடியோ எவ்வாறு கோட் செய்யப்பட்டு கம்ப்ரெஸ் செய்யப்பட வேண்டும் என்பதை கோடெக்ஸ் முடிவு செய்யும்.

Flac

Flac

பிரீ லாஸ் ஆடியோ கோடெக் பைல் ஒபன் சோர்ஸ் ஆடியோ கம்ப்ரெஷன் பார்மேட் ஆகும். இதை கொண்டு ஆடியோ பைல்களை அதன் உண்மையான அளவில் இருந்து கம்ப்ரெஸ் செய்து குறைக்க முடியும். மற்ற பார்மேட்களுடன் ஒப்பிடும் போது இதில் ஆடியோ தரம் குறைந்திருக்கும்.

PDF

PDF

போர்ட்டபிள் டாக்குமென்ட் பார்மேட் என அழைக்கப்படும் இந்த பார்மேட் பிரின்ட் செய்யப்பட வேண்டிய அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது. இதில் புகைப்படத்தை பார்த்து, பிரின்ட் செய்வதோடு மேலும் பலவற்றை செய்திட முடியும். இந்த பார்மேட்டினை நாளிதழ் மற்றும் விளம்பர தகவல்களுக்கு பயன்படுத்தலாம்.

DOC

DOC

இது மைக்ரோசார்ட் வொர்டு பைல் ஆகும். இந்த பார்மேட் டெக்ஸ்ட், புகைப்படம், டேபிள், கிராஃப், சார்ட், பேஜ் பார்மேட்டிங் மற்றும் பிரின்ட் செட்டிங்ஸ்களை கொண்டுள்ளது.

Best Mobiles in India

Read more about:
English summary
File Format is a standard way that information is encoded for storage in a computer file. Check out the various file formats here

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X