பொழுதுபோக்கு அம்சங்களுடன் புதிய பிஜிட்சூ டேப்லெட்!

பிஜிட்சு நிறுவனம் விரைவில் ஒரு புதிய ஸ்டைலான டேப்லெட்டைக் களமிறக்க இருக்கிறது. இந்த டேப்லெட்டிற்கு ஸ்டைலிஸ்டிக் எம்532 என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த டேப்லெட் ஆன்ட்ராய்டு ஐசிஎஸ் இயங்கு தளம் மற்றும் க்வாட் கோர் எஆர்எம் கோர்டெக்ஸ் எ9 ஆகிய வசதிகளைக் கொண்டிருப்பதால் இதன் வேகமும் இயங்கு திறனும் சூப்பராக இருக்கும் என்று நம்பலாம்.
இந்த டேப்லெட்டை வர்த்தகப் பயன்பாட்டிற்காக முழுமையாகப் பயன்படுத்த முடியும். வர்த்தக பயன்பாட்டிற்காகவே இந்த டேப்லெட் தயாரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆசஸ் ட்ரான்ஸ்பார்மர் பேட்300, தோஷிபா எடி200 மற்றும் சாம்சங் கேலக்ஸி டேப் 10.1 ஆகிய டேப்லெட்டுகளுக்கு இந்த புதிய ஸ்டைலிஸ்டிக் டேப்லெட் கடும் போட்டியைக் கொடுக்கும் என்றும் நம்பப்படுகிறது.
இந்த புதிய டேப்லெட் 10.1 இன்ச் அளவு கொண்ட டபுள்யுஎக்ஸ்ஜிஎ டிஸ்ப்ளேயைக் கொண்டிருக்கிறது. இந்த டிஸ்ப்ளே முழுமையான மல்டிமீடியா அனுபவத்தை வழங்கும். இதன் 8.0 எம்பி பின்பக்க கேமரா ஆட்டோ போக்கஸ் மற்றும் ப்ளாஷ் வசதிகளைக் கொண்டிருக்கிறது. இதன் 2.0 முகப்பு கேமரா வீடியோ உரையாடலை மெருகேற்றும்.
இதன் பேட்டரி இந்த டேப்லெட்டுக்கு நீடித்த இயங்கு நேரத்தை வழங்குகிறது. மேலும் இதில் இருக்கும் அட்டகாசமான ஸ்பீக்கர்கள் மற்றும் மைக்ரோ போன் ஆகியவை இனிமையான இசையைக் கேட்டு மகிழ உதவும்.
இது ஆன்ட்ராய்டு இயங்கு தளத்தில் வருவதால் ஆன்ட்ராய்டு அப்ளிகேசன்களையும் இந்த டேப்லெட்டில் பயன்படுத்தலாம். இந்த டேப்லெட்டில் இருக்கும் வெர்ச்சுவல் டெஸ்க்டாப் இன்ப்ராஸ்டரக்சர் என்ற தொழில் நுட்பம் மூலம் ஏராளமான வர்த்தக அப்ளிகேசன்களைப் பயன்படுத்த முடியும்.
இந்த புதிய டேப்லெட் ரூ.40,000க்கு விற்கப்பட இருக்கிறது. விரைவில் விற்பனைக்கு வந்துவிடும் என நம்பலாம்.


Click it and Unblock the Notifications