4 மடங்கு அதி வேகத்துடன் புதிய பிஜிட்சூ டேப்லெட்!

Posted By: Karthikeyan
4 மடங்கு அதி வேகத்துடன் புதிய பிஜிட்சூ டேப்லெட்!

கடந்த வாரம் லாஸ் வேகாஸில் நுகர்வோர் மின்னனு பொருள் சிறப்பான முறையில் நடைபெற்றது. ஏராளமான நிறுவனங்கள் தங்களது புதிய கெட்ஜெட்டுகளை அறிமுகப்படுத்த அமர்க்களப்படுத்தினர். இந்த கண்காட்சி முடிந்த பிறகும் பல நிறுவனங்கள் தங்களது புதிய டிவைஸ்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் பிஜிட்சூ நிறுவனம் தனது புதிய டேப்லெட்டை இப்போது அறிவித்திருக்கிறது. அந்த டேப்லெட்டின் பெயர் பிஜிட்சு ஸ்டைலிஸ்டிக் எம்532 ஆகும். இந்த பிஜிட்சு டேப்லெட் அட்டாசமான சிறப்புகளைக் கொண்டிருக்கின்றன.

அதாவது இந்த டேப்லெட் 1280 X 800 பிக்சல் ரிசலூசன் கொண்ட 10.1 இன்ட் டிஸ்ப்ளேயைக் கொண்டிருக்கிறது. அதுபோல் 8 மெகா பிக்சல் கொண்ட பின்பக்க கேமராவும் 3 மெகா பிக்சல் கொண்ட முகப்பு கேமராவும் கொண்டிருக்கிறது. சேமிப்பு வசதியைப் பார்த்தால் 16 ஜிபி இன்டர்னல் சேமிப்பைக் கொண்டுள்ளது. அதோடு இதன் ப்ராசஸர் என்விடியா டேக்ரா3 சிலிகான் ப்ராசஸர் ஆகும்.

மேலும் பிஜிட்சு நுகர்வோர் கண்காட்சியில் ஆரோஸ் என்ற குவாட்கோர் போன் மாடலை அறிமுகப்படுத்தியது. இந்த போன் புதிய டேப்லெட்டுக்கு ஒரு பரிசாக இருக்கும். இந்த டேப்லெட்டின் டேக்ரா3 சிலிகான் ப்ராசஸர் இந்த டேப்லெட்டுக்கு மகா சக்தியைக் கொடுக்கும்.

இதன் கடிகார வேகம் 2ஜிஹெர்ட்ஸாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. அதனால் இதன் வேகம் சிங்கிள் கோர் ப்ராசஸரின் வேகத்தைவிட 4 மடங்கு அதிகமாக இருக்கும். அதனால் மல்டிமீடியா எடிட்டிங் வேலைகளை இந்த டேப்லெட்டில் மிக எளிதாக அதே நேரத்தில் விரைவாக செய்ய முடியும்.

இந்த ஸ்டைலிஸ்டிக் டேப்லெட்டின் முன்புறம் திரை இருக்கிறது. வீடியோ காலிங் செய்யக் கூடிய முகப்பு கேமரா இதன் உச்சியில் உள்ளது. பிஜிட்சுவின் முத்திரை இதன் அடிப்பக்கம் உள்ளது. முன்புறம் கருப்பு நிறத்திலும் பின்புறம் மேட் க்ரே நிறத்திலும் வருகிறது.

இதன் முக்கிய கேமரா எல்இடி ப்ளாஷ் வசதியைக் கொண்டிருக்கிறது. இதன் பக்கவாட்டில் யுஎஸ்பி போர்ட்டுகள் உள்ளன. மொத்தத்தில் பார்த்தால் இந்த டேப்லெட் ஒரு அடக்கமான டிவைஸ் ஆகும். அதுபோல் இதன் இயக்குவதும் மிக எளிதாக இருக்கும். விலையைப் பார்த்தால் இந்த ஸ்டைலிஸ்டிக் டேப்லெட் ரூ.34,000க்கு கிடைக்கும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்