இந்தியாவில் அட்டகாசமான அல்ட்ராபுக்குகளைக் களமிறக்கிய பிஜிட்சு

Posted By: Karthikeyan
இந்தியாவில் அட்டகாசமான அல்ட்ராபுக்குகளைக் களமிறக்கிய பிஜிட்சு

சமீபத்தில் பிஜிட்சு நிறுவனம் இந்தியாவில் இரண்டு புதிய அல்ட்ராபுக்குகளைக் களமிறக்கி இருக்கிறது. இந்த புதிய அல்ட்ராபுக்குகளுக்கு லைப்புக் யு772 மற்றும் லைப்புக் யுஎச்572 என்று பெயர் சூட்டப்பட்டிருக்கின்றன.

1.4 கிலோ எடையுடன் வரும் லைப்புக் யு772 அல்ட்ராபுக் பல சூப்பரான தொழில் நுட்ப வசதிகளுடன் வருகிறது. இந்த லேப்டாப் கருப்பு மற்றும் வெள்ளி ஆகிய வண்ணங்களில் பார்ப்பதற்கு மிக அழகாக வருகிறது. மேலும் இந்த லேப்டாப்பில் 3ஜி/யுஎம்டிஎஸ் அல்லது 4ஜி/எல்டிஇ சப்போர்ட்டைத் தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம்.

இதன் மூலம் வைபை இணைப்பு இல்லாத இடங்களில்கூட இந்த லேப்டாப்பில் நெட்வொர்க் இணைப்பை ஏற்படுத்த முடியும். இந்த லேப்டாப் ரூ.75,900க்கு விற்கப்பட இருக்கிறது.

அதே நேரத்தில் லைப்புக் யுஎச்572 லேப்டாப் 13.3 இன்ச் அளவில் வருகிறது. இதன் திரை ஆன்டி க்ளேர் வசதி கொண்டுள்ளது. மேலும் இந்த லேப்டாப் ஏராளமான பாதுகாப்பு வசதிகளைக் கொண்டு வருகிறது. குறிப்பாக இந்த லேப்டாப் திருடு போனாலும் இதை எளிதில் கண்டுபிடித்து விடலாம். இந்த லேப்டாப் ரூ.65,000க்கு விற்கப்பட இருக்கிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்