Home
Computer

அனைத்து அம்சங்களுடன் வரும் பிஜிட்சூவின் உயர்தர டேப்லெட்!

By Karthikeyan

அனைத்து அம்சங்களுடன் வரும் பிஜிட்சூவின் உயர்தர டேப்லெட்!
பிஜிட்சு நிறுவனம் தனது புதிய உயர்தர டேப்லெட்டைக் களமிறக்க இருக்கிறது. இந்த டேப்லெட்டிற்கு க்யு702 என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த டேப்லெட் வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த உயர்தர டேப்லெட் விண்டோஸ் 7 இங்கு தளத்தில் இயங்குகிறது. அதோடு 11.6 இன்ச் அளவில் மிகத்துல்லியமான டிஸ்ப்ளேயைக் கொண்டிருக்கிறது. அதுபோல் இதன் டிஸ்ப்ளேயில் கொரில்லா க்ளாஸ் கோட்டிங்கும் உள்ளது. மேலும் இதில் கீபோர்ட் மற்றும் பென் இன்புட் சோப்போர்ட்டும் இந்த டேப்லெட்டில் உண்டு.

இந்த டேப்லெட் வர்த்தகத்திற்கு பயன்படும் வகையில் ஏராளமான தொழில் நுட்பங்களைக் கொண்டு வருகிறது. அதாவது இன்டல் ஆன்ட் தெப்ட் தொழில் நுட்பம், டிபிஎம் மற்றும் கம்யூட்டரைஸ் சப்போர்ட் ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது. அதுபோல் டபுள்யு எஎன் மற்றும் எல்டிஇ போன்ற இணைப்பு வசதிகளையும் உள்ளடக்கி இருக்கிறது.

இந்த க்யு702 டேப்லெட் ஐவி ப்ரிட்ஜ் ப்ராசஸர்களைக் கொண்டிருப்பதால் இதன் செயல் திறன் மிக உறுதியாக இருக்கும். இதன் 4ஜிபி ரேம் இந்த டேப்லெட்டிற்கு அபாரமான வேகத்தை வழங்கும். எஸ்எஸ்டி மூலம் இதன் சேமிப்பை 128 ஜிபி வரை விரிவு செய்ய முடியும். மேலும் இது குறைந்த எடையில் வருவதால் இதை எளிதில் எடுத்து செல்லவும் முடியும்.

இதன் முகப்பு கேமரா மூலம் வீடியோ உரையாடலை சூப்பராக நடத்த முடியும். அதுபோல் இதில் இருக்கும் இன்டல் எச்டி க்ராபிக்ஸ் 4000 மூலம் இதில் க்ராபிக்ஸ் வேலைகளையும் செய்ய முடியும்.

இந்த உயர்தர டேப்லெட் 4.5 மணி நேர இயங்கு நேரத்தைக் கொண்டிருக்கிறது. மேலும் இந்த டேப்லெட் எர்த்நெட் ஜாக், யுஎஸ்பி போர்ட், விஜிஎ போன்ற இணைப்பு வசதிகளைக் கொண்டுள்ளது.

பிஜிட்சுவின் இந்த உயர்தர டேப்லெட் இந்த ஆண்டின் இறுதியில் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது. இதன் விலை ரூ.55,000மாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X