பிஜிட்சூ அறிமுகப்படுத்தும் புதிய நோட்புக்!

Posted By: Karthikeyan
பிஜிட்சூ அறிமுகப்படுத்தும் புதிய நோட்புக்!

பிஜிட்சு இந்தியா நிறுவனம் சமீபத்தில் ஒரு புதிய நோட்புக்கைக் களமிறக்கி இருக்கிறது. இந்த புதிய நோட்புக்கிற்கு லைப்புக் எஸ்எச்531 என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த லேப்டாப் ரூ.45,000க்கு விற்பனை செய்யப்பட இருக்கிறது.

அன்றாட வேலைகளைச் செய்வதற்கும், அலுவலகப் பணிகளைச் செய்வதற்கும், மற்றும் படிப்புக்கான வேலைகளைச் செய்வதற்கும் ஏதுவான வகையில் இந்த லேப்டாப் வருகிறது. அதனால் இந்த லேப்டாப் நடுத்தர மக்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோருக்கு ஏதுவான வகையில் இருக்கும் என நம்பலாம்.

இந்த புதிய நோட்புக் 13.3 இன்ச் ஆன்டி க்ளேர் எல்இடி பேக்லிட் டிஸ்ப்ளேயைக் கொண்டுள்ளது. அதுபோல் 2ஜி இன்டல் கோர் ஐ5 ப்ராசஸர் மற்றும் இன்டல் எச்டி க்ராபிக்ஸ் ஆகியவற்றுடன் வருகிறது.

விண்டோஸ் 7 ப்ரபசனல் இயங்குதளத்தில் வரும் இந்த லேப்டாப் 34 எம்எம் எக்ஸ்ப்ரஸ் கார்ட் ஸ்லாட், ப்ளூரே டிஸ்க் ட்ரைவ், எச்டிஎம்ஐ போர்ட், 1.3 எம்பி வெப்காம், டிஜிட்டல் மைக்ரோபோன் மற்றும் உறுதியான கீபோர்ட் ஆகியவற்றுடன் வருகிறது.

அதனால் இந்த லேப்டாப்பில் வேலை செய்வது மிகவும் எளிதாக இருக்கும். இந்த லேப்டாப் மிக உறுதியாகவும் இருக்கும். அதோடு இதன் செயல் திறனும் அபார வேகத்துடன் இருக்கும் என நம்பலாம்.

இந்த பிஜிட்சு லேப்டாப் ஜெர்மன் என்ஜினரியரிங் மற்றும் ஜப்பானின் தரம் ஆகியவற்றைக் கலந்து வருகிறது என்று பிஜிட்சுவின் இந்திய மேலாளர் அலோக் சர்மாக கூறுகிறார். இந்த புதிய லேப்டாப் இந்திய மக்களைக் கவருமா என்று பொருத்திருந்து பார்க்கலாம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot