ஆன்ட்ராய்டு டேப்லெட்டுடன் களத்தில் குதிக்கும் பிஜிட்சூ!

Posted By: Karthikeyan
ஆன்ட்ராய்டு டேப்லெட்டுடன் களத்தில் குதிக்கும் பிஜிட்சூ!

ஜப்பானிய நிறுவனமான பிஜிட்சு எலக்ட்ரானிக் துறையில் மிகவும் கொடிகட்டி பறக்கும் நிறுவனம் ஆகும். சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் அந்நிறுவனம் தனது புதிய ஆன்ட்ராய்டு டேப்லெட் மூலம் விரைவில் டேப்லெட் சந்தைக்குள் நுழையவிருப்பதாக அறிவித்திருக்கிறது.

மேலும் இந்த டேப்லெட் ஆன்ட்ராய்டு 4 வெர்சனைக் கொண்டிருக்கும். மேலும் வரும் ஜூன் மாதம் இந்த டேப்லெட் சந்தைக்கு வரும் என்றும் தெரிகிறது. மேலும் இந்த டேப்லெட் ட்ரான்ஸ்பார்மர் ப்ரைம் அல்லது லெனோவா ஐடியா டேப் எஸ்2 போன்ற டேப்லெட்டுகளுக்கு சவாலாக இருக்கும் வகையில் வரும் என்று தெரிகிறது.

பிஜிட்சூ ஏற்கனவே தனது இந்த ஆண்டுக்கான திட்டங்களை அறிவித்துவிட்டது. அவர்களின் எந்த ஒரு திட்டமும் சிறிய திட்டம் அல்ல. மாறாக மெகா திட்டம் ஆகும். அதாவது உயர்தர டேப்லெட்டுகள், நோட்புக்குகள், மேசை கணினிகள் மற்றும் ஏராளமான அக்சஸரிகள் போன்றவற்றை இந்த ஆண்டில் களமிறக்க திட்டமிட்டிருக்கிறது.

இந்த புதிய ஆன்ட்ராய்டு டேப்லெட் வரும் ஜுன் மாதத்தில் களமிறங்கும் என்று தெரிகிறது. அதற்கு முன்பாக பிஜிட்சு தனது ஸ்லிம்புக்கை அறிமுகப்படுத்தி இருக்கிறது. அதற்கு முன்பாகவே வரும் மே மாதத்தில் இரண்டு புதிய அல்டரா புக்குகளையும் அறிமுகப்படுத்த இருக்கிறது.

மேலும் இந்த கோடையில் ஆன்ட்ராய்டு 5.0 ஜெல்லிபீன் பரிசோதனை செய்து பார்க்கப்படும். ஆனால் இந்த தகவல் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot