இன்டர்சேஞ்சபிள் லென்ஸ் தொழில்நுட்பத்துடன் புதிய ஃபியூஜி கேமரா!

Posted By: Karthikeyan
இன்டர்சேஞ்சபிள் லென்ஸ் தொழில்நுட்பத்துடன் புதிய ஃபியூஜி கேமரா!

கேமரா என்றாலே நினைவுக்கு வரும் நிறுவனங்களில் ஃபியூஜிக்கும் முக்கிய இடம் உண்டு. ஆம், ஃபியூஜி நிறுவனத்தின் கேமராக்கள் எப்போதுமே தரமாக இருக்கும். மேலும் இந்த பிஜி நிறுவனம் கேமரா தயாரிப்பில் நெடுங்காலமாக ஈடுபட்டு வருகிறது. அதோடு தனது கேமராக்களில் புதுமையான தொழில்நுட்பங்களை புகுத்தி வருகிறது ஃபியூஜி. இப்போது இந்த ஃபியூஜி ஒரு இன்டர்சேஞ்சபிள் லென்ஸ் கேமராவை அறிமுகப்படுத்த இருக்கிறது. இணைய தளங்களின் இந்த கேமராவின் படங்கள் பலவித ஸ்டைல்களில் வந்திருக்கின்றன.

கேமரா சந்தையில் பியூஜி நிறவனத்திற்கு சமமான அளவில் நிக்கோன் போன்ற நிறுவனங்களிலிருந்து கடுமையான போட்டிகளும் உண்டு. ஏனெனில் நிக்கோன் ஏற்கனவே தனது புதிய கேமராவை அறிவித்திருக்கிறது. அதாவது நிக்கோனின் கேமரா சென்சார் மற்றும் சிஎக்ஸ் மவுண்ட் கொண்டு இன்டர் சேஞ்சபுள் லென்ஸ் சந்தையில் நுழைந்திருக்கிறது. அதுபோல் கேமரா தயாரிப்பில் இன்னுமொரு முன்னனி நிறுவனமான கேனன் இந்த இன்டர் சேஞ்சபுள் லென்ஸ் சந்தையில் நுழைய இருக்கிறது. ஆனால் ஃபியூஜி மற்ற நிறுவனங்களோடு போட்டியிட பலவிதமான தந்திரங்களைக் கடைபிடிக்கிறது.

இந்த ஃபியூஜியின் புதிய கேமராவைப் பற்றி ஏராளமான நம்பமுடியாத மற்றும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்களும் வதந்திகளும் வந்த வண்ணம் உள்ளன. இனையதளத்தில் உள்ள ஃபியூஜியின் முழுமையடையாத புதிய கேமராவின் படங்கள் உள்ளன. இந்த கேமரா பிப்ரவரி மாதம் சந்தைக்கு வரும் என்று தெரிகிறது.

இந்த ஃபியூஜி கேமராவின் சிறப்பு அம்சங்களைப் பார்த்தால் இது ரெட்ரோ ரேன்ச்பைன்டர் ஸ்டைல் டிசைனில் வருகிறது. இதன் படங்களிலிருந்து பார்க்கும் போது புகைப்படம் எடுப்பவர்களுக்கு விருப்பமான 35மிமீ எப்/1.4 லென்ஸ்களை இந்த கேமரா கொண்டுள்ளது.

வீடியோ சூட்டிங்கிற்காக இந்த கேமராவில் ஒரு எல்இடி லைட்டும் உள்ளது. இந்த கேமராவில் ஒரு வியூவ் பைன்டர் உள்ளது. எல்இடியின் பக்கவாட்டுகளில் ஸ்டீரியோ ஆடியோவிற்காக இன்பில்ட் மைக்ரோபோன்களும் உள்ளன. அடுத்ததாக வியூவ் பைன்டருக்குக் கீழ் வலது பக்கம் ஒரு ஆட்டோ போக்கஸ் லைட்டும் உள்ளது. இதன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot