ஐபோன், ஐபேட் வரிசையில் அடுத்து வரும் ஆப்பிள் டிவி..!!

Posted By: Karthikeyan
ஐபோன், ஐபேட் வரிசையில் அடுத்து வரும் ஆப்பிள் டிவி..!!

ஆப்பிள் ஒரு டிவியை அறிமுகம் செய்ய இருப்பதாக இணையதளங்களில் வதந்தீ காட்டுத் தீப்போல பரவி வந்தது. அந்த வந்தி தற்போது உண்மையாகப் போகிறது.

ஐபோன் மற்றும் ஐபேட் ஆகியவற்றை வடிவமைத்த பாக்ஸ்கான் இப்போது ஆப்பிள் ஐடிவியை தயாரிப்பதில் தீவிரமாக இருக்கிறது. சைனா டெய்லி என்ற பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் பாக்ஸ்கானின் தலைவர் டெரி கோ தமது நிறுவனம் ஆப்பிளின் புதிய டிவியை தற்போது தயாரித்து வருவதாக வெளிப்படையாக அறிவித்திருக்கிறார். அதன் மூலம் பல காலமாக நிலவி வந்த வதந்தி இப்போது நிஜமாகப் போகிறது என்று கூறுகிறார்.

இந்த டிவி பேஸ் டைம் மற்றும் வீடியோ காலிங் போன்ற வசதிகளுடன் வர இறுக்கிறது. இந்த புதிய டிவி தயாரிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை. எனவே, இந்த டிவி இந்த ஆண்டுக்குள் விற்பனைக்கு வருவது சாத்தியமில்லை என்று சைனா டெய்லி நாளிதழ் கூறுகிறது.

பாக்ஸ்கான் மற்றும் ஆப்பிள் சிறந்த வர்த்தக நண்பர்கள் என்ற முறையில் டெரி ஏதோ ஒரு காரணத்திற்காக இந்த முக்கியத் தகவலைக் கசியவிட்டிருக்கிறார் என்று தெரிகிறது.

மேலும் பாக்ஸ்கான் இந்த புதிய ஆப்பிள் டிவியைத் தயாரிக்க ஷார்ப் நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்திருக்கிறது என்ற சைனா டெய்லி கூறுகிறது. சைனா டெயிலியின் இந்த புதிய தகவல் உண்மையா அல்லது பொய்யா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்