விண்டோஸ் 8 க்கு ஸ்பெஷல் பயர்பாக்ஸ்!!!

Written By:

இன்று இணையத்தில் நாம் உலவ அதிகம் பயன்படுத்தும் பரவுசர் எது என்று கேட்டால் அது குரோம் மற்றும் பயர்பாக்ஸ் தான்.

விண்டோஸ் 8 சிஸ்டத்தின் மெட்ரோ இண்டர்பேஸ் திரையில் இயங்கக் கூடிய பயர்பாக்ஸ் பிரவுசர் தொகுப்பு, வரும் டிசம்பர் 10ல் வெளிவர இருக்கிறது.

இந்த, பயர்பாக்ஸ் 26, பிரவுசர் தொகுப்பு கடந்த ஓர் ஆண்டாக வடிவமைக்கப்பட்டு தயாராக இருந்தது.

ஆனாலும், விண்டோஸ் 8 விற்பனைக்கு வந்த பின்னரும், மொஸில்லா இதனை வெளியிடவில்லை. இப்போது விண்டோஸ் 8.1 வெளி வந்த பின்னர், இது வாடிக்கையாளருக்குக் கிடைக்க இருக்கிறது.

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

 விண்டோஸ் 8 க்கு ஸ்பெஷல் பயர்பாக்ஸ்!!!

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

மைக்ரோசாப்ட், இனி வருங்காலத்தில், தொடு உணர் திரை இயக்கம் தான் அனைவரும் பயன்படுத்தும் செயல்பாடாக இருக்கும் என உறுதியாகக் கூறி வந்தாலும், அதன் விண்டோஸ் 8 இதனை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும், டிஜிட்டல் உலகில், ஆண்ட்ராய்ட் மற்றும் ஐபேட் சாதனங்களில் தான் அதிகமாக, தொடு உணர் திரை இயக்கங்கள் அதிகமாக இருந்து வந்தன.

இதற்கிடையே, மொஸில்லா, ஆண்ட்ராய்ட் இயக்கத்தில் தொடு உணர் இயக்கமாக பயர்பாக்ஸ் பிரவுசரை வடிவமைத்து வழங்கியது.

அதே நேரத்தில், ஸ்மார்ட் போன்களுக்கான ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஒன்றையும் மொஸில்லா வடிவமைத்தது. எனவே, இந்த அனுபவத்தின் அடிப்படையில், விண்டோஸ் 8க்கான பிரவுசரையும் வடிவமைத்து, வரும் டிசம்பரில் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது மொஸில்லா.

ஏற்கனவே, மைக்ரோசாப்ட் தன் விண்டோஸ் 8 சிஸ்டத்துடன், மெட்ரோ இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரை வழங்கி வருகிறது. கூகுள் நிறுவனமும் தன் குரோம் பிரவுசரைத் தயாரித்துக் கொடுத்துள்ளது.

இப்போது பயர்பாக்ஸ் 26 மெட்ரோ பதிப்பாக வர இருக்கிறது. இனி, விண்டோஸ் 8 சிஸ்டத்தில், இவற்றில் எந்த பிரவுசர் வெற்றி பெற போகும் என்பதை நா்ம பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot