சிகரம் தொட்ட பயர்பாக்ஸ்...

By Keerthi
|

இன்று நாம் அதிகமாக பயன்படுத்தும் உலவி பயர்பாக்ஸ் தான் உங்களுக்கே அது நன்றாக தெரியும்.

நாம் பயர்பாக்ஸ் உலாவி மீது கொண்ட காதலால் ஒன்றும் பயர்பாக்ஸ் பயன்படுத்த தொடங்கவில்லை.

இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் மேல் வந்த வெறுப்பே நம்மை பயர்பாக்ஸ் பயன்படுத்த வைத்தது. இப்போது அதுவே நம் பிரதான பிரவுசராகியும் போனது.

ஆயினும் பழைய பாசத்தால் சில சமயம் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பயன்படுத்த முயற்சிப்போம். போன வேகத்தில் மீண்டும் FF-யிடமே வந்துவிடுவோம். அப்பப்போ கிராஷ் ஆகுதல் ,அதன் ஆமை வேகம் IE மீது வெறுப்படிக்க வைத்து விடும்.

சிகரம் தொட்ட பயர்பாக்ஸ்...

நீங்கள் இணைய உலாவரும் போது கூட அசாதாரண வேகமின்மை அல்லது எந்த error-ம் கொடுக்காமல் வெற்று பக்கத்திலேயே அரைமணி நேரமாய் நிற்றல் போன்ற அறிகுறி தெரிந்தால் ஒரு வேளை அது இணைய இணைப்பு பிரச்சனையாய் இல்லாமல் உங்கள் பிரவுசர் பிரச்சனையாய் இருக்கலாம்.

பயர்பாக்ஸ்க்கு தாவிடுங்கள். FF-யின் வேகம், வகை வகையான இலவச Add-on கள் அதன் ப்ளஸ்கள். அலுவலகத்தில் இப்போதெல்லாம் பயர்பாக்ஸ் ஒரு ஸ்டேட்டஸ் சிம்பல் போல் ஆகிவிட்டது.

IE பயன்படுத்துபவர்களை பாவம் விவரம் அறியாதவர்களென்றும் FF பயன்படுத்துகிறவர்களை damn smart விவரம் அறிந்தவர்களென்றும் மூளை தானாகவே பகுத்துவிடுகின்றது.

துரதிஷ்டவசமாய் தமிழில் இன்னும் சில வலைப்பக்கங்கள் பயர்பாக்ஸில் ஒழுங்காய் தெரிவதில்லை. அவற்றை படிப்பதற்காக வேண்டியே IE-யை திறக்க வேண்டியுள்ளது.

நீங்கள் சொந்தமாய் தமிழில் வலைப்பக்கம் வைத்திருந்தால் தயவுசெய்து அது Firefox browser-யிலும் சரியாய் தெரிகிறதாவென சரிபார்க்கவும்.

Kricons-ன் blogger template யோசனையையே இங்கும் வழங்குகிறேன். "Firefoxல் அனைவரது வலைபதிவும் நன்றாக தெரிய பதிவை எழுதும் போது text-align justify யை பயன் படுதாமல் இருந்தாலே போதும்."

பயர்பாக்ஸ் உலாவியில் நாம் சமீபத்தில் அறியவந்த ஒரு அருமையான Add-on பெயர் Piclens. கூகிள் படங்கள் தேடலில் தமனாவை நீங்கள் தேடுகின்றீர்கள் என வைத்துக்கொள்வோம்.(updated) அது இணையத்தில் தமனா படங்களாய் தேடி காட்டும். அந்த படங்களை அட்டகாசமாய் 3D தாக்கத்தில் "ஸ்லைடு ஷோ"போல இறக்கம் செய்யாமலே பார்க்க இந்த Add-on உதவுகின்றது.

நம் அபிமான பயர்பாக்ஸ் ஒரு கின்னஸ் உலக சாதனை செய்திருக்கின்றது.24 மணிநேரத்தில் உலகிலேயே அதிக அளவில் இறக்கம் செய்யப்பட்ட மென்பொருள் என்ற சாதனையை அது செய்யதுள்ளது.

இது போல இன்னொரு உலக சாதனையை செய்ய http://www.internetbigbang.com தயாராகிக்கொண்டிருக்கிறது. அதாவது ஒரே நேரத்தில் அதிகமான நபர்கள் ஆன்லைனில் இருந்த தளம் என்ற பெயரை இது எடுக்கப்போகின்றது.

என்னமோ பண்ணுங்க என்னைய ஆள விடுங்கனு நீங்க சொல்றது புரியுதுங்க.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X