பேஸ்புக்கில் உங்கள் ப்ரோபைலை பார்க்கிறவர்களை தெரிந்து கொள்ளலாம்

Written By:

இதுவரை பேஸ்புக் எத்தனையோ புதுப்புது வசதிகளை நமக்கு இலவசமாக கொடுத்து வந்திருக்கின்றது தற்போது முதன்முதலாக பணம் கொடுத்து வாங்கும் ஒரு வசதியை விரைவில் அறிமுகப்படுத்தி இருக்கின்றது.

இதன்மூலம் குறிப்பிட்ட டாலர் பணத்தை பேஸ்புக்கிற்கு நீங்கள் கொடுத்தால் உங்களது பேஸ்புக் பிரவுசர் ஹிஸ்ட்ரியை(Facebook Browser History) விற்பனை செய்ய இருக்கின்றது பேஸ்புக்.

இந்த பிரவுசர் ஹிஸ்ட்ரியை உங்களுக்கு மட்டும் தனிப்பட்ட முறையில் அனுப்பி வைத்து விடும்.

பேஸ்புக்கில் உங்கள் ப்ரோபைலை பார்க்கிறவர்களை தெரிந்து கொள்ளலாம்

இதன் மூலம் கடந்த ஆறு மாத காலத்துக்குள் நீங்கள் யாருடைய ப்ரோபைலை பார்த்தீர்கள், உங்களது ப்ரோபைலை யார் யார் பார்த்துள்ளார்கள் என்று நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

மேலும் உங்களது ஸ்டேட்டஸ் அல்லது போட்டோவுக்கு யார் அதிகமாக லைக் போட்டு வந்திருக்கிறார்கள் என்றும் இதில் பார்க்கலாம்.

உங்களது மொத்த பேஸ்புக் டேட்டாவையும் பேஸ்புக் உங்களுக்கு அனுப்பி வைத்துவிடும் இதற்கான கட்டண விவரங்கள் பற்றி பேஸ்புக் இன்னும் அறிவிக்கவில்லை.

விரைவில் பேஸ்புக் இது குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்க இருக்கின்றது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot