Subscribe to Gizbot

இன்றைக்கு பேஸ்புக்கில் நடந்து கொண்டிருப்பது இதுதான்

Posted By:

இன்றைக்கு நல்லது, கேட்டது என அனைத்தையுமே பகிர்ந்து கொள்ளும் தளமாக பேஸ்புக் மாறிவிட்டது முன்பெல்லாம் இளசுகள் மட்டுமே அதிகம் காணப்பட்ட இதில் இன்று பெருசுகளின் ஆட்டமும் தற்போது அதிகமாகிவிட்டது.

இது நாம் தினமும் பேஸ்புக்கில் பார்க்கும் கூத்து தான் ஒரு சின்ன எடுத்துக்காட்டு ஏதாவது ஒரு பேஜில் ஒரு பெண் கமென்ட் போட்டால் அங்க போய் I'm blocked pls add me னு பிச்சைக்காரன் மாதிரி சில ஜொல்லுவான்கள் கெஞ்சிட்டு இருக்கறத நீங்க பாத்திருப்பீங்க.

நீ யாருண்ணே தெரியாத நிறைய பொண்ணுங்களுக்கு அதிக பிரெண்ட் ரெக்வஸ்ட் அனுப்பி தான் ப்ளாக் ஆகிருக்க இப்ப இந்த மானம் கெட்ட பொழப்பு உனக்கு தேவையா அப்படின்னு கேக்க தோணும் நிறைய பேத்துக்கு.

இது எல்லாதையும் விட பெரிய காமெடி சமூக பிரச்சனைகளை பற்றி யாராவது ஸ்டேட்டஸ் போட்டால் உடனே அங்க கமென்டில் வந்து சவுன்ட் கொடுக்கறதுக்குன்னே ஒரு கும்பல் இருக்கும் இவனலாம் அப்படி பண்ணணும் இப்படி பண்ணணும் அப்படின்னு சொல்லுவாங்க ஒரு குரூப்பு.

இப்படி இருக்குற இன்னும் நிறைய பேர பத்தி பாக்கலாம்ங்க ஸ்லைடுக்கு வாங்க...

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
இன்னைக்கு பேஸ்புக்கில் நடந்து கொண்டிருப்பது இதுதான்

#1

சரிங்க இன்னைக்கு இருக்கறதுலயே பெரிய கடுப்பு என்னான்னா நம்ம ப்ரெண்ட் ஏதாவது ஒரு மொக்கை போட்டோவ நமக்கு TAG செஞ்சி கடுப்பேத்தறது தாங்க... அந்த போட்டோக்கும் நமக்கும் ஒரு சம்பந்தமும் இருக்காது ஆனா டேக் பண்ணி கொலையா கொல்லுவாங்க

தெய்வம்

#2

அடுத்து நம்ம எவ்வளோ ப்ரொபைல் பிக்சர் மாத்துனாலும் எவ்ளோ போஸ்ட் போட்டாலும் ஒரு தெய்வ நண்பன் லைக் பண்ணிக்கிட்டே இருப்பாங்க

மன்மத ராசாக்கள்

#3

இன்னொரு குரூப் ஒன்னு இருக்குங்க வெறும் பொண்ணுங்களுக்கு மட்டும் ப்ரெண்ட் ரெக்வஸ்டா அனுப்பி இன்பாக்ஸ் போய் Hai Hai னு அனுப்புனதையே அனுப்பி ஆனந்த தொல்லை பண்ணிட்டு இருப்பாங்க

Feeling Sad

#4

அடிக்கடி அதிகம் பொண்ணுங்க போடற ஸ்டேட்டஸ் இதுதாங்கFeeling Sad அப்படின்னு.. நம்ம பசங்க இத பாத்துட்டா போதும் உடனே கமென்ட்ல What happen..Why, அப்படி இப்படின்னு வழிஞ்சு தள்ளிருவாங்க..இப்படி ஸ்டேட்டஸ் போடுற பொண்ணுங்கள மட்டும் என்னைக்குமே நம்பிற கூடாது மக்கா...

பொண்ணுங்களோட இன்னொரு பில்ட் அப்

#5

நிக்கறது ரேஷன் கடைல இதுல Shopping with Mom னு ஸ்டேட்ஸ் போடுவாங்க இந்த பொண்ணுங்க... நம்ம பசங்க என்ன நெனைச்சிட்டு இருப்பாங்க வாவ் இந்த பொண்ணு ஏதோ மால்ல ஷாப்பிங்க போய்ட்டு இருக்குன்னு... அது தப்பு சாமி

பசங்க போடுற ஸ்டேட்டஸ்

#6

பையன் ஸ்டேட்டஸ்க்கு அதிகம் லைக் வராதுங்க அது எவ்ளோ பெரிய சூப்பர் ஸ்டேட்டஸா இருந்தாலும்ங்க ஒரு சிலர் 5000 ப்ரெண்ட்ஸ் வெச்சுருப்பாங்க அவங்களுக்கு ஏதோ லைக்ஸ் அப்பப்ப வந்து விழும்ங்க..

Image Courtesy Statista

ஸ்டேட்டஸ்

#7

உங்களுக்காக ஒரு குட்டி ஸ்டேட்டஸ்ங்க... அன்றாட விஷயங்களை இப்படி ஸ்டேட்டஸா போட ட்ரை பண்ணுங்க இதோ.....எவ்ளோ பெரிய பேய் படம் பாத்து
வராத பயத்த நாம நம்ம
மொபைல் இருக்கான்னு ரைட் சைட்
ஜீன்ஸ் பாக்கெட்ட தடவிபாத்துட்டு இல்லைன்னு
உடனே
லேப்ட் சைடு பரபரப்பா போவோம்
பாருங்க அதுக்கு ஈடாகதுங்க எந்த பேய் படமும்..

முக்கியமான ஒன்று

#8

இப்போ நிறைய பேர் ஃபேக் ஐடி பொண்ணுங்க பேர்ல கிரியேட் பண்ணிட்டு சுத்திக்கிட்டு இருக்காங்க அவசர பட்டு அவங்களுக்கு ரெக்வஸ்ட் கொடுத்துராதீங்க...ஏன் சொல்றனா இப்படி ஃபேக் ஐடி வெச்சிருக்கிற ஆளுங்க எல்லாரும் "அவனா நீ" ஆளுங்க தான் அதனால கொஞ்சம் உஷாரு நண்பா

TAG தொல்லையில் இருந்து தப்பிக்க

#9

உங்களுக்கு போட்டோTAG நண்பர்களின் தொல்லையில் இருந்து தப்பிக்க வேண்டுமா இதோ அதற்கு ஒரு வழி

TAG தொல்லையில் இருந்து தப்பிக்க

#10

முதலில் Settings போங்க இது நீங்க Log Out செய்ய அழுத்துவீங்களே வலது பக்கம் ஒரு பொத்தான் அதுக்குள்ள தாங்க இருக்கு.

TAG தொல்லையில் இருந்து தப்பிக்க

#11

இப்ப நீங்க Settings குள்ள போனவுடனே இடது பக்கம் பாருங்க Privacy னு ஒரு ஆப்ஷன் இருக்கும் அதுக்கு கீழ Timeline and tagging னு ஒரு ஆப்ஷன் இருக்கும் அத கிளிக் பண்ணுங்க இப்ப.

TAG தொல்லையில் இருந்து தப்பிக்க

#12

இப்ப அது ஒப்பன் ஆன வுடனே Who can add things to my timeline? அதுல only me கொடுங்க அப்புறம் அதோட விட்றாதிங்க இப்ப அதுக்கு கீழ இருக்குற Review posts friends tag you in before they appear on your timeline? இத கிளிக் பண்ணி Enable கொடுங்க

TAG தொல்லையில் இருந்து தப்பிக்க

#13

இப்ப உங்கள எந்த புண்ணியாவான் ஆவது Tag செஞ்சா அது நேரா உங்க டைம்லைனுக்கு வராது அது உங்க அனுமதிய கேட்டு தான் டைம்லைனுக்கு வரும் அப்ப இத நாம் Hide பண்ணிக்கலாம்.

பேஸ்புக் போராளிகள்

#14

இவங்க தாங்க ரொம்ப முக்கியமானவாங்க அதாவது இவுங்க போராட்டம் எல்லாமே பேஸ்புக் குள்ள மட்டும் தாங்க இருக்கும்.."அந்த கோட்ட தாண்டி நீயும் வரக் கூடாது நானும் வர மாட்டேன்" அந்த மாதிரி ஆளுங்க இவங்க புலிய கொன்னுட்டா அய்யோ போச்சே போச்சேனு கதறுவாங்க காவல் துறையை வன்மையாக கண்டிக்கிறோம்னு ஸ்டேட்ஸ் வேற

பேஸ்புக் போராளிகள்

#15

அந்த புலி கொன்ன 3 பேரு இவுங்க கண்ணுக்கு தெரிய மாட்டாங்க தனக்கு வந்தா தான தெரியும் வலியின் அருமை...பேஸ்புக்ல பேசுனா எவன் கேப்பான்னு தான்

பேஸ்புக் முக்கியம் அமைச்சரே

#16

ஒரு சிலர் எது நடந்தாலும் பேஸ்புக்ல ஸ்டேட்டஸா போட்டே நம்மள கொல்லுவாங்க..அதுல அவுங்களுக்கு என்ன கிடைக்க போகுதுன்னு தெரியலைங்க

அரசியல்

#17

இப்போது அரசியலை வளர்க்க ஒரு சிலர் மிகவும் தீவிரமாக பேஸ்புக்கை பயன்படுத்தி வருகிறார்கள் பேஸ்புக் வந்ததோட நோக்கமே இப்ப இல்லாம போச்சுங்க..அது போக அதுல சண்டை வேற என் தலைவன நீ எப்படிடா இப்படி சொல்லாம் அப்படி இப்படின்னு

காமூகர்கள்

#18

இவர்கள் பெண்களை குறிவைத்து அதிகம் தற்போது கிளம்பி உள்ளார்கள் எனலாம்... இவங்க கிட்ட ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணுங்க..இவர்களை அடையாளம் காணுதல் ரொம்ப ஈஸிங்க வான்டட்டா இன்பாக்ஸ்ல வந்து ஜொல்லு ஊத்துவாங்க,பொண்ணுங்க போடுற ஸ்டேட்டஸ்கு செமயா கமென்ட் போடுவாங்க இப்படி சொல்லிட்டு போகலாம்ங்க

இளைஞர்கள்

#19

இன்றைக்கு அதிகம் பேர் இது இல்லையென்றால் இருக்க முடியாது என்ற நிலைக்கு வந்துள்ளனர்

அவ்வளவு தான் சாமி

#20

இவ்ளோதாங்க இன்னைக்கு பேஸ்புக்ல நடக்குறது இதுதாங்க இன்னைக்கு நடந்துட்டு இருக்கறது பேஸ்புக்கை அளவாக பயன்படுத்த நிச்சயம் நாம் கற்றுக் கொள்ள வேண்டும்ங்க.....இதே போல் பேஸ்புக்கில் உங்களுக்கு தெரிந்த வேறு எதாவது உண்டு எனில் அதை கமென்ட் பண்ணவும் நண்பரே நாம் புதிதாக பேஸ்புக் பக்கம் ஒன்றை தொடங்கி உள்ளோம் அதை லைக் பண்ணி பேஸ்புக்லயும் இந்த மாதிரி செய்திகளை பெற்றிடுங்கள் இதோ லைக் பண்ண இதை கிளிக் பண்ணுங்க..இது போல மேலும் பல செய்திகளுக்கு இணைந்திருங்கள் Gizbot.com

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot