பேஸ்புக்கில் இமெயில் இனி இல்லை...!

Written By:

இன்றைக்கு நாம் பயன்படுத்தும் பேஸ்புக்கில் இ மெயில் சேவை இருந்ததா என்று கேட்டால், இல்லை என்று தான் நாம் சொல்லுவோம் ஆனால் உண்மையில் அப்படி ஒரு சேவை இருந்தது பேஸ்புக்கில்.

ஆனால், தற்போது அது மூடப்பட்டுவிட்டது. காரணம்? யாரும் அதனைப் பயன்படுத்தாததே அதற்குக் காரணமாகும்.

இது, 2010 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், பேஸ்புக் மின்னஞ்சல் சேவை குறித்து அறிவிப்பு வெளியானது. ஆனால், அப்போதிருந்த நிலையில் யாரும் அதனைக் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை.

இப்போதுதான் அது மூடப்படுகிறது என்ற செய்தி நம் பேஸ்புக் தளத்தில் கிடைக்கும்போதுதான், அப்படி ஒன்று இருந்ததா எனப் பலரும் கேட்கத் தொடங்கினார்கள்.

பேஸ்புக்கில் இமெயில் இனி இல்லை...!

இந்த மின் அஞ்சல் தளத்தில் மெசேஜ், சேட் மற்றும் மின் அஞ்சல் என அனைத்தும் இணைந்தே இருந்தன. இதிலிருந்து பேஸ்புக் பயன்படுத்தாதவர்களுக்கும் மெயில் அனுப்பும் வசதி இருந்தது.

இதனைப் பயன்படுத்துபவர்களுக்கு, அவர்களின் பதிவுசெய்யப்பட்ட பெயருடன் username@facebook.com என மின்னஞ்சல் முகவரி தரப்பட்டது.

இதன் வழி அனுப்பப்படும் மின் அஞ்சல்கள், பெறுபவரின் இன் பாக்ஸில் காட்டப்பட்டு வந்தது. இது அவ்வளவாகப் பயன்படுத்தப் படாததால், தற்போது முடிக்கப்பட்டுவிட்டது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot