பேஸ்புக் கமென்டை அழிக்க.....

By Keerthi
|

இன்று இணையத்தில் வெகு வேகமாகத் தன் வாடிக்கையாளர் எண்ணிக்கையை பேஸ்புக் சமூக இணைய தளம் அதிகரித்து வருகிறது. அடிக்கடி பேஸ்புக் தளத்தினைப் பார்ப்பது ஒருவித மன நோயாகவே, மக்களிடம் அமைந்துவிட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பேஸ்புக் சமூக இணைய தளத்தில், நாம் நம் உணர்ச்சி உந்துதலில், பல தகவல்களை, செய்திகளை, நம் கருத்தினப் பதிவு செய்துவிடுகிறோம். பின்னரே, சிலவற்றைப் பதியாமல் இருந்திருக்கலாமே என்று எண்ணுகிறோம்.

பதிந்தவற்றை எப்படி நீக்குவது எனத் தெரியாமல் பலர் உள்ளனர். இது மிகவும் எளிதான ஒன்றாகும். நீங்கள் பதிந்தவற்றை எப்போது வேண்டுமானாலும், நீங்கள் மாற்றலாம் அல்லது நீக்கலாம்.

நீங்கள் மாற்ற அல்லது நீக்க விரும்பும் பதிவின் வலது மூலையில், கர்சரைக் கொண்டு சென்று சற்று நகர்த்திப் பார்க்கவும். அப்போது கீழ் நோக்கிய சிறிய அம்புக் குறி ஒன்று காட்டப்படும்.

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

பேஸ்புக் கமென்டை அழிக்க.....

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

அதனைக் கிளிக் செய்தால், பதிவினை மாற்ற (edit or delete) அல்லது நீக்க என இரண்டு ஆப்ஷன்கள் காட்டப்படும். இதில் உங்களுக்கு விருப்பமானதைத் தேர்ந்தெடுத்து செயல்படுத்தலாம்.

உங்களுடைய பக்கத்தில் பதியப்பட்டுள்ள கருத்துக்களை நீங்கள் பார்க்க விரும்பவில்லை எனில், அதனை மறைத்தும் வைக்கலாம். இதே போல, யாருடைய குறிப்பிட்ட பதிவை மறைக்க விரும்புகிறீர்களோ, அதில் சென்று, வலது மேல் பக்கம் கர்சரை நகர்த்திப் பார்க்கவும்.

கிடைக்கும் மெனுவினைக் கிளிக் செய்து, பதிவை மறைக்கும் ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கலாம். குறிப்பிட்ட நபரின் அனைத்து பதிவுகளையும் நீக்குவதற்கும் ஆப்ஷன் தரப்படும்.

உங்களுடைய டைம் லைனில், யாராவது ஒன்றைப் போஸ்ட் செய்து, அதனை நீக்க விரும்பினாலும், நீக்குவதற்கு ஆப்ஷன் தரப்பட்டுள்ளது. இதே போல அம்புக் குறி மீது கிளிக் செய்து ஆப்ஷன்களைப் பார்க்கவும்.

குறிப்பிட்ட பதிவை நீக்கலாம். உங்களை டேக் (tag) செய்திருந்தால், அதிலிருந்தும் இதே போல உங்களை விலக்கிக் கொள்ளலாம்.

உங்களைச் சாராதது அல்லது பொருந்தாதது என்று கருதும் பதிவுகள், உங்கள் டைம் லைனில், மற்றவர்களிடமிருந்து அதிகம் பெற்றால், அது குறித்து பேஸ்புக் நிர்வாகத்திற்கு முறையிடலாம்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X