இவ்ளோ வருஷமா யூஸ் பண்றோம், ஆனா இது தெரியாம போச்சே.!

|

"ஆமாம் காருக்கு எதுக்கு அச்சாணி.?" என்ற முத்து திரைப்பட பாணியில் எது எதற்கு பயன்படும் என்றுகூட தெரியாமல் நம்மில் பலர் சுற்றித்திரிக்கிறோம். அதிலொன்று தான் நாம் அனுதினமும் கம்ப்யூட்டர் கீபோர்ட மற்றும் லேப்டாப் கீபேடில் காணும் எப் கீஸ் எனப்படும் பன்க்ஷன் கீஸ் - இன்னும் விளக்கமாக கூறினால் எப்1 முதல் எப் 12 வரை உள்ள பொத்தான்கள்.!

இவ்ளோ வருஷமா யூஸ் பண்றோம், ஆனா இது தெரியாம போச்சே.!

ஒரு கணினியின்/ லேப்டாப்பின் விசைப்பலகை மேல் பக்கமாக வரிசையாக அமைந்துள்ள எப் கீஸ் எனப்படும் பங்க்ஷன் பொத்தான்கள் ஒன்றும் தூசி சேகரிப்பதற்காக அங்கு வைக்கப்படவில்லை. அவைகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு செயல்களைச் செய்யும், மிகவும் பயனுள்ள ஷார்ட்கட் பொத்தான்கள் ஆகும். அவைகள் என்னென்ன பயன்பாடுகளை வழங்குகிறது என்பதை கண்டறிவோம் வாருங்கள்.!

எப்1 மற்றும் எப்2

எப்1 மற்றும் எப்2

எப்1 : கிட்டத்தட்ட எந்தவொரு ப்ரோகிராம் ஆக இருந்தாலும் சரி, ஹெல்ப் ஸ்க்ரீன் ஓப்பன் செய்ய இந்த கீ உங்களுக்கு உதவும்.

எப்2: இந்த கீயை உபயோகிப்பதின் மூலமாக நீங்கள் தேர்வு செய்துள்ள போல்டர்களின் பெயரை மாற்றி அமைக்கலாம், அதாவது ரீநேம் செய்யலாம்.

எப்3 மற்றும் எப்4

எப்3 மற்றும் எப்4

எப்3 : நீங்கள் உலாவிக்கொண்டிருக்கும் ஆக்டிவ் ப்ரவுஸர்களில் சேர்ச் பாக்ஸை திறக்க இந்த கீ பயன்படும்.

எப்4 :இந்த கீ, விண்டோஸ் எக்ஸ்பி-யில் மை கம்ப்யூட்டர் அல்லது விண்டோஸ் எக்ஸ்ப்ளோரரில் பாரை திறக்க உதவும் மற்றும் ஆல்ட் உடன் இணைத்து பயன்படுத்தப்படும் பொழுது ஆக்டிவ் ஆக இருக்கும் விண்டோவை உதவும்.

எப்5 மற்றும் எப்6

எப்5 மற்றும் எப்6

எப்5 : ஒரு வலைப்பக்கத்தையோ அல்லது விண்டோவின் டாக்குமென்ட்டையோ ரீலோட் செய்யவோ அல்லது ரிப்பிரஷ் செய்யவோ இந்த கீ உங்களுக்கு உதவும்.

எப்6 : பெரும்பாலான இன்டர்நெட் ப்ரவுசர்களில் கர்ஸரை அட்ரஸ் பார் நோக்கி நகர்த்த இந்த கீ பயன்படுகிறது.

எப்7 மற்றும் எப்8

எப்7 மற்றும் எப்8

எப்7 : மைக்ரோசாப்ட் வேர்ட் போன்ற மைக்ரோசாப்ட் அப்ளிகேஷன்களில், டாக்குமென்டில் உள்ள எழுத்துப்பிழை மற்றும் இலக்கண பிழைகளை கண்டறிய இந்த கீ உதவும்.

எப்8 : கம்ப்யூட்டரை டர்ன் ஆன் செய்யும் போது விண்டோவில் பூட் மெனு அக்சஸ்தனை பெற இந்த கே உங்களுக்கு உதவும்.

எப்9 மற்றும் எப்10

எப்9 மற்றும் எப்10

எப்9 : மைக்ரோசாப்ட் வேர்ட் டாக்குமெண்டை ரிப்பிரஷ் செய்யவும் மற்றும் மைக்ரோசாப்ட் மூலம் இமெயிலை அனுப்பவும் பெறவும் இந்த கீ உதவும்.

எப்10 : திறந்திருக்கும் அப்ப்ளிகேஷனில் மெனு பாரை ஆக்டிவேட் செய்ய மற்றும் ஷிப்ட் உடன் இணைய, ரைட் கிளிக் செய்யும் அதே செயல்பாட்டை செய்ய இந்த கீ உதவும்.

எப்11 மற்றும் எப்12

எப்11 மற்றும் எப்12

எப்11 : இண்டர்நெட் ப்ரவுஸர்களில் புல் ஸ்க்ரீன் மோட்தனை எண்டர் செய்யவும், எக்சிட் செய்யவும் இந்த கீ உதவும்.

எப்12 : மைக்ரோசாப்ட் வேர்ட் டாக்குமென்டில் சேவ் ஆஸ் டயலாக் பாக்ஸை திறக்க இந்த கீ உதவும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
F1 to F12: Time-Saving Function Key Shortcuts Everyone Should Know. Read more about this in Tamil Gizbot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X