உயர்தரத்தில் ஈரோகாம் களமிறக்கும் புதிய லேப்டாப்!

ஈரோகாம் நிறுவனம் சமீபத்தில் ஒரு உயர்தர லேப்டாப்பை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த புதிய லேப்டாப்புகள்கு பாந்தர் 5.0 என்ற பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த லேப்டாப் மிக அசூரத் தன்மையுடன் வருகிறது. குறிப்பாக இந்த லேப்டாப்பில் டிபிஎம் 1.2 பாதுகாப்பு, கைரேகை பதிவு வசதி, கென்சிங்டன் பூட்டு மற்றும் ஜிபிஎஸ் ட்ராக்கின் போன்ற பாதுகாப்பு வசதிகள் உள்ளன.
6.5 கிலோ எடையுடன் வரும் இந்த லேப்டாப் 8 கோர் இன்டல் ஐ7 ப்ராசஸர்களைக் கொண்டிருக்கிறது. அதனால் இதன் உறுதி மற்றும் செயல்திறனைப் பற்றி கேள்வி எழுப்பத் தேவையில்லை.
அதோடு இந்த லேப்டாப் 1எக்ஸ் இன்டர்னல் பிசிஐ-இ ஸ்லாட் மற்றும் துணை இன்டர்னல் பிசிஐ-இ ஸ்லாட், ப்ளூடூத், எக்ஸ்ப்ரஸ் கார்டு, டிஸ்ப்ளே போர்ட், இசட்டா, பையர்வயர், ஜிபிஎஸ், எச்டிஎம்ஐ, ஐ/ஒ போர்ட், இன்டல் எக்ஸ்79 எக்ஸ்ப்ரஸ் சிப்செட், ஆப்டிக்கல் ட்ரைவ் பே, க்வட்கோர் ஜிபியு, எஸ்பிடிஐஆர், 3 யுஎஸ்பி 3.0 போர்ட்டுகள், டிபிஎம் 1.2 சப்போர்ட், இரண்டு 10 ஜிபிஇ எர்த்நெட் போர்ட்டுகள், 2 யுஎஸ்பி 2.0 போர்ட்டுகள், வெப்காம் மற்றும் வைபை என ஏராளமான தொழில் நுட்பங்களை அள்ளித் தெளித்திருக்கிறது.
மேலும் இந்த பாந்தர் லேப்டாப் க்வட் எஸ்எல்ஐ க்ராபிக்ஸ் மற்றும் க்ராஸ் பயரை சப்போர்ட் செய்கிறது. இதன் மூலம் என்விடியா அல்லது எஎம்டி ஆகியவற்றின் 4 ஜிபியு மாடல்களை இந்த லேப்டாப் சப்போர்ட் செய்யும்.
இதன் மெமரி 96ஜிபி டிடிஆர்3-1600 ஆகும். இதை 6டிபி வரை அதிகரிக்கலாம். இதன் கீபோர்ட் அட்டகாசமாக உள்ளது. அதுபோல் எண்களுக்காக தனியான கீபோர்டும் உள்ளது. இதன் தொடுதளம் வேலை செய்வதற்கு மிக வசதியாக உள்ளது.
மேலும் பல நல்ல மற்றும் உயர்தர தொழில் நுட்பங்களுடன் வரும் பாந்தர் லேப்டாப்பின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த ஆண்டு மத்தியில் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications