ரூ.3000ல் வரும் புதிய ஆன்ட்ராய்டு டேப்லெட்!

Posted By: Karthikeyan
ரூ.3000ல் வரும் புதிய ஆன்ட்ராய்டு டேப்லெட்!

இசர் நிறுவனம் ஒரு புதிய மலிவு விலை டேப்லெட்டைக் களமிறக்க இருக்கிறது. இந்த டேப்லெட்டுக்கு இசர் எ10 என்ற பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. குறிப்பாக மலிவு விலை டேப்லெட்டை விரும்புவோருக்கு இந்த டேப்லெட் ஒரு சிறந்த தோழனாக இருக்கும்.

இந்த எ10 டேப்லெட் பல சிறப்பான அசம்சங்களைக் கொண்டு வருகிறது. அதாவது 800×480 பிக்சல் ரிசலூசன் கொண்ட 7 இன்ச் டிஸ்ப்ளே, 1.2 ஜிஹெர்ட்ஸ் பாக்சிப் சிபியு, 4 ஜிபி மெமரி, எஸ்டி கார்டு, எச்டிஎம்ஐ அவுட், வைபை, முகப்பு கேமரா, யுஎஸ்பி 3 போன்ற அடிப்படையானத் தொழில் நுட்பங்களைக் கொண்டுள்ளது.

இந்த டேப்லெட்டின் முக்கிய சிறப்பு என்னவென்றால் இது ஆன்ட்ராய்டு 2.3 இயங்கு தளத்தில் இயங்குகிறது.

இதன் அகலத் திரையில் படம் பார்ப்பது சூப்பராக இருக்கும். அதுபோல் இது மிக வேகமாக இயங்கக்கூடியது. மேலும் இதில் பாடல் கேட்பதும் ஒரு சிறந்த அனுபவமாக இருக்கும்.

இதன் விலை ரூ.3000 மட்டுமே. விலையைக் கேட்டால் ஆன்ட்ராய்டு ரசிகளர்களுக்கு ஒரு புறம் அதிசயமாகவும் மறுபுறம் ஆனந்தமாகவும் இருக்கிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்