Home
Computer

என்வன்ட் வழங்கும் அட்டகாசமான கீபோர்டு மற்றும் மவுஸ்!

By Karthikeyan
என்வன்ட் வழங்கும் அட்டகாசமான கீபோர்டு மற்றும் மவுஸ்!

சாதாரண கீபோர்டு மற்றும் மவுஸ் ஆகியவற்றைப் பார்க்கும் போது அதில் ஒரு கவர்ச்சியே இருக்காது. மேலும் அவை ஸ்டைலாகவோ அல்லது பல வண்ண கலவைகளுடனோ இருக்காது.

ஆனால் அப்படிப்பட்ட கீபோர்டு மற்றும் மவுஸ் ஆகியவற்றில் ஒரு புதுமையை கொண்டு வந்திருக்கிறது என்வன்ட் நிறுவனம். குறிப்பாக குழந்தைகளைக் கவர வேண்டும் என்பதற்காக என்வன்ட் சூப்பரான ஸ்டைலான கீபோர்டையும் மற்றும் மவுசையும் வழங்குகிறது.

இந்த மவுஸ்களில் மிதக்கும் மீன்கள், கால்பந்துகள் மற்றும் படகுகள் ஆகியவற்றைப் பார்க்கலாம். அதுபோல் இதன் கீபோர்டும் பல வண்ன கலவைகளில் அசத்தலாக வருகிறது. இதன் மவுசின் விலை ரூ.500க்கும், கீபோர்டின் விலை ரூ.1100க்கும் விற்கப்படுகிறது.

குழந்தைகள் மனங்களைக் கவரவும் அவர்களை மகிழ்ச்சிப்படுத்தவும் இப்படிப்பட்ட மவுஸ் மற்றும் கீபோர்டுகளைக் களமிறக்கி இருப்பதாக என்வன்ட் கூறுக்கிறது. இதன் கீபோர்டின் பட்டன்கள் பிங்க் மற்றும் ஊதா ஆகிய நிறங்களில் வருகின்றன. அதே போல் உயிரெழுத்து பட்டன்கள் தனியான வண்ணத்திலும் மெய்யெழுத்து பட்டன்கள் தனியான வண்ணத்திலும் வருகின்றன.

மேலும் இந்த கீபோர்டில் உள்ள பட்டன்கள் மிகப் பெரிதாக இருப்பதால் இதில் குழந்தைகள் வேலை செய்வதற்கு மிக எளிதாக இருக்கும். குழந்தைகளை மட்டும் கவரும் என்று சொல்லப்படும் இந்த புதுமையன மவுஸ் மற்றும் கீபோர்டு கண்டிப்பாக பெரியவர்களையும் கவரும் என நம்பலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X