ஐபேடுக்கு லாஜிடெக் அறிமுகப்படுத்தும் புதிய ஆக்சஸெரீஸ்!

குறிப்பாக வாடிக்கையாளர்களின் தேவைகளை மனதில் வைத்தே இந்த நவீன ஆக்சஸெரீஸ்களை லாஜிடெக் வழங்குகிறது. இந்த டிவைஸ்கள் அனைத்தும் டேப்லெட்டுகளில் மிக எளிதாக இணைக்க முடியும்.
ஐபேட்2வுக்கான லாஜிடெக்கின் கீபோர்ட் அலுமினிய அவுட்டரைக் கொண்டிருக்கிறது. இதனால், டைப் செய்யும் போது ஐபேட் திரையின் மீது ஏற்படும் கீறல்கள் மற்றும் தேய்மானத்தை தவிர்க்கலாம். மேலும், ப்ளூடூத் மூலம் இதை இணைக்க முடியும். அடுத்ததாக லாஜிடெக்கின் ஸ்பீக்கர் ஸ்டேண்ட்டில் ஐபேடை அழகாக பொருத்தி வைக்க முடியும்.
இந்த ஸ்டேண்டை மிக எளிதாக திருப்ப முடியும். இதை எடுத்துச் செல்வதும் மிக எளிது. டேப்லெட்டின் ஹெட்போன் ஜாக்கில் இந்த ஸ்பீக்கரை இணைத்து விட முடியும். இந்த ஸ்பீக்கரில் 8 மணி நேரம் தொடர்ந்து பாடல் கேட்டாலும் இதன் பேட்டரி தாங்க்ககூடிய சக்தியைக் கொண்டிருக்கிறது.
லாஜிடெக்கின் புதிய வயர்லஸ் ஹெட்செட்டில் ப்ளூடூத் இணைப்பு மற்றும் இரைச்சல் தடுப்பு கொண்ட மைக்ரோபோன் ஆகியவை உள்ளன. இந்த ஹெட்செட் ரிஜார்ஜ் செய்யக் கூடிய மற்றும் 8 மணி நேரம் தாங்க கூடிய பேட்டரியையும் கொண்டுள்ளது.
மேலும், டேப்லெட்டுடை ப்ளூடூத் மூலம் லாஜிடெக்கின் பூம்பாக்சுடன் இணைத்துக்கொள்ளலாம். இந்த பூம்பாக்ஸ் 6 மணி நேரம் தாங்கக்கூடிய ரீஜார்ஜபுள் பேட்டரியையும் கொண்டு வருகிறது. ஆனால் இந்த லாஜிடெக்கின் புதிய சாதனங்களின் விலை விபரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.


Click it and Unblock the Notifications