இனி 3ஜி வசதியுடன் லெனோவா திங்பேட் லேப்டாப்!

Posted By: Staff
இனி 3ஜி வசதியுடன் லெனோவா திங்பேட் லேப்டாப்!
மார்க்கெட்டில் தற்போதைய பரபரப்பு செய்தி லெனோவா திங்பேட் லேப்டாப்பை 3ஜி சப்போர்ட்டால் அப்டேட் செய்யப்படுகிறுது என்பதாகும்.  இனி லெனோவாவின் திங்பேடில் 3ஜி வசதியை நாம் அனுபவிக்கலாம்.

நமக்கு வந்த தகவலின் படி இனி லெனோவா லேப்டாப்புகள் இனி க்யூவல்காம் கோபி 3000 என்ற இன்டர்நெட் இணைப்பு தொழில்நுட்பத்துடன் வர உள்ளது. இதனால், அதிவேக இன்டர்நெட் வசதியை லெனோவா லேப்டாப்புகளில் பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

லெனோவா திங்க்போடு ஜிஎஸ்எம் மற்றும் சிடிஎம்எ நெட்வொர்க்குகளுடன் மிக எளிதாக இணைக்க முடியும்.

இதில் ரோமிங் பிரச்சினை இருக்காது. அதனால் இதன் அப்டேட்டிற்கு உலக அளவில் பெரிய வரவேற்கு இருக்கும் என்று தெரிகிறது. அதுபோல் இந்த அப்டேட்டினால் தகவல் பரிமாற்றம் அதிவேகமாக இருக்கும். அதன் மூலம் வியாபாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு இந்த திங்பேட் மிக வசதியாக இருக்கும்.

திங்பேடில் உள்ள கோபி 300 ஓஎஸ் தொழில் நுட்பம் இருப்பதால் இதை மிக எளிதாக இன்டர்நெட்டுடன் இணைக்க முடியும். அதற்காக அதன் ஹார்டுவேரை மாற்றத் தேவையில்லை. மேலும் இதில் உள்ள ஆன்ட்ராய்டு இயங்குதளம் உள்ளதால் இதன் செயல்திறன் மிக வேகமாக இருக்கும். அதோடு இதன் சேமிப்பு வசதியும் அதிகமாக இருக்கும்.

அதுபோல் இதிலுள்ள ப்ளூடூத் மற்றும் யுஎஸ்பி இணைப்பு தகவல் பரிமாற்றத்திற்கு மிகவும் வசதியாக இருக்கும். மேலும் இது சிறந்த பேட்டரி திறனையும் கொண்டுள்ளது. இதன் தொடுதிரை சகல வசதிகளையும் வழங்குகிறது.

இருந்தாலும் இந்த லெனோவா திங்பேடில் 3ஜியை அப்டேட் செய்வது பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot