Home
Computer

பன்முக பயன்பாடுகளுடன் புதிய இமாட்டிக் டேப்லெட்!

By Karthikeyan
பன்முக பயன்பாடுகளுடன் புதிய இமாட்டிக் டேப்லெட்!

உலக டேப்லெட் சந்தையில் நாளுக்கு நாள் புதிய புதிய டேப்லெட்டுகள் வந்து கொண்டே இருக்கின்றன. அந்த வகையில் இமாட்டிக் நிறுவனம் ஒரு புதிய 10 இன்ச் ஆன்ட்ராய்டு டேப்லெட்டைக் களமிறக்க இருக்கிறது. இந்த புதிய டேப்லெட்டுக்கு இக்ளைட் எக்ஸ்எல் ப்ரோ 2 என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

கருப்பு நிறத்தில் மிக அழகாக வரும் இந்த டேப்லெட் ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ்க்ரீம் சான்ட்விஜ் இயங்கு தளத்தைக் கொம்டிருக்கிறது. மேலும் இது ஒரு மலிவு விலை டேப்லெட் ஆகும். இதன் 10 இன்ச் டிஸ்ப்ளே கப்பாசிட்டிவ் மல்டி டச் வசதி கொண்டிருக்கிறது.

இந்த டேப்லெட் 1ஜிஹெர்ட்ஸ் டூவல் கோர் ப்ராசஸர், 400 எம்ஹெர்ட்ஸ் ஜிபியு மற்றும் மல்டி கோர் சிப்செட் கொண்டிருப்பதால் இது மிக உறுதியாக இருக்கும். அதே நேரத்தில் மிக வேகமாக இயங்கும்.

இந்த டேப்லெட் முகப்பு கேமரா கொண்டிருப்பதால் மிக அருமையான வீடியோ உரையாடலை நடத்த முடியும். மேலும் இந்த டேப்லெட் 1080பி எச்டி வீடியோவையும் சப்போர்ட் செய்யும்.

சேமிப்பு வசதிக்காக இந்த டேப்லெட் 4ஜிபி சேமிப்பு கொண்ட 1 ஜிப ரேமைக் கொண்டுள்ளது. மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் இந்த சேமிப்பை 32ஜிபி வரை அதிகரிக்க முடியும்.

இந்த டேப்லெட் டபுள்யுலேன், யுஎஸ்பி மற்றும் எச்டிஎம்எல் ப்ரவுசர் போன்ற இணைப்பு வசதிகளையும் கொண்டிருக்கிறது. மேலும் பொழுதுபோக்கு அம்சங்களுக்காக ஆடியோ மற்றும் வீடியோ ப்ளேயர், வீடியோ கேம்கள், ஸ்பீக்கர்கள் மற்றும் ஆடியோ ஜாக் போன்றவற்றை இந்த டேப்லெட் வழங்குகிறது. எனவே இந்த டேப்லெட் சிறந்த பொழுதுபோக்கையும் வழங்கும்.

இந்த இமாட்டிக் டேப்லெட் கோபோ இரீடிங் அப்ளிகேசன் மற்றும் இமாட்டிக் அப் ஷாப் ஆகிய வசதிகளைக் கொண்டு வருகிறது. அதன் மூலம் புதிய புதிய தொழில் நுட்பங்களை இதில் பதிவிறக்கம் செய்ய முடியும்.

இந்த டேப்லெட் ரூ.11000க்கு விற்கப்பட இருக்கிறது. மேலும் இது இந்த மே மாத இறுதிக்குள் விற்பனைக்கு வந்துவிடும் என்று தெரிகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X