3டி கண்ணாடியுடன் வரும் புதிய டேப்லெட்!

Posted By: Karthikeyan
3டி கண்ணாடியுடன் வரும் புதிய டேப்லெட்!

இமாட்டிக் நிறுவனம் ஒரு புதிய ஆன்ட்ராய்டு டேப்லெட்டைக் களமிறக்குகிறது. இந்த புதிய 7 இன்ச் டேப்லெட்டிற்கு இக்ளைட் பிரிஸ்ஸம் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. கேமிங் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் இந்த டேப்லெட்டில் ஏராளமாக உள்ளன.

இந்த இமாட்டிக் டேப்லெட் பல சூப்பரான தொழில் நுட்பங்களை வழங்குகிறது. குறிப்பாக இதன் 7 இன்ச் டிஸ்ப்ளே 480 x 800 பிக்சல் ரிசலூசனை வழங்குகிறது. 6 பவுண்டு எடை மட்டுமே கொண்டுள்ள இந்த டேப்லெட் 1 ஜிஹெர்ட்ஸ் சிஹ்கிள் கோர் ப்ராசஸர் மற்றும் 512 எம்பி ரேம் ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது.

மேலும் இந்த டேப்லெட் 8ஜிபி இன்டர்னல் சேமிப்பையும் மற்றும் 5ஜிபி க்ளவுடு சேமிப்பையும் வழங்குகிறது. அதோடு இந்த கேமராவில் வைபை, முகப்பு கேமரா, மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் மற்றும் 3 ஆக்சிஸ் ஜிரோஸ்கோப் ஆகியவையும் உள்ளன.

இந்த இக்ளைட் டேப்லெட்டின் டிஸ்ப்ளே கருப்பு மற்றும் உதா நிற 3டி கண்ணாடிகளைக் கொண்டிருக்கிறது. அதனால் இதில் 2160பி 3டி எச்டி வீடியோவை மிகத் துல்லியமாக பார்க்க முடியும்.

இந்த ஆன்ட்ராய்டு டேப்லெட் ஒரே நேரத்தில் மிக வேகமாக பல வேலைகளைச் செய்யக்கூடியது. மேலும் இதில் வெப் ப்ரவுசிங்கும் வேகமாக இருக்கும். இதன் தொடு திரையின் மூலம் இந்த டேப்லெட் மிக வேகமாக இயக்க முடியும்.

இந்த டேப்லெட்டில் ஸ்பீக்கரும் உள்ளதால் இனிமையான பாடல்களையும் கேட்க முடியும். இதன் ப்ராசஸர் இந்த டேப்லெட்டிற்கு மகா உறுதியைத் தருகிறது.

இந்த இமாட்டிக் டேப்லெட் இயர்போன்கள், வால் சார்ஜர், 3டி கண்ணாடிகள், மற்றும் யுஎஸ்பி கேபிள் போன்றவற்றுடன் வருகிறது. இதன் விலை ரூ.11000 ஆகும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot