இந்தியாவில் தயாரான குறைந்த விலை டேப்லெட்கள்

By Super
|
இந்தியாவில் தயாரான குறைந்த விலை டேப்லெட்கள்


நேற்று பெங்களூரைச் சேர்ந்த EAFT டெக்னாலஜிஸ் என்ற நிறுவனம், தான் தயாரித்த 2 புதிய டேப்லெட்களான D 90T மற்றும் D70P ஆகியவற்றை வெளியிடுவதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டது.

இவ்விரண்டு டேப்லெட்களும் ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சாண்ட்விட்ச் இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டதாகும்.

D 90T, D70P டேப்லெட்கள் இந்தியாவில் தயாரிக்கப்படும் குறைந்த விலைகொண்ட டேப்லெட்களாகும். இவற்றின் விலைகள் முறையே, ரூ.16,990 மற்றும் ரூ.12,990.D 90Tயின் சில நுட்பக்கூறுகள்:

 • 9.7 அங்குல HD தொடுதிரை.

 • 1024 x 768 பிக்ஸல் ரெசுலூசன்,

 • 1.6 GHz டூயல் கோர் கார்டெக்ஸ் A9 ப்ராசெசர்,

 • 1 ஜிபி ரேம்,

 • 2 எம்பி ரியர், ப்ரன்ட் கேமரா,

 • ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சாண்ட்விட்ச் இயங்குதளம்.

 • WiFi, ப்ளுடூத், மற்றும் 3G.

D70Pயின் சில நுட்பக்கூறுகள்:

 • 7 அங்குல HD தொடுதிரை.

 • 1024 x 600 பிக்ஸல் ரெசுலூசன்,

 • 1.6 GHz டூயல் கோர் கார்டெக்ஸ் A9 ப்ராசெசர்,

 • 512 எம்பி ரேம்,

 • 2 எம்பி ரியர், 0.3எம்பி ப்ரன்ட் கேமரா,

 • ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சாண்ட்விட்ச் இயங்குதளம்.

 • WiFi, ப்ளுடூத், மற்றும் 3G.

இணையம் வழியாகச் செயல்படும் வேர்ல்ட்ஸ்பேஸ் எனும் வானொலிக்கான இலவச அப்ளிகேசனுடன் கிடைக்கும் இந்த இரண்டு டேப்லெட்களுக்கான அறிமுக விலையாக D 90Tக்கு ரூ.14,990 எனவும் D70Pக்கு ரூ.10,990 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X